India vs West Indies 2nd Test: இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. கடந்த முதல் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்து வருகிறது.
இறுதிப் போட்டியில் இந்தியா மீண்டும் வெற்றியை பதிவு செய்து தொடரை 2-0 என கைப்பற்றும் என்று போட்டி அறிஞர்கள் பெரிதும் நம்பிக்கை காட்டி வருகின்றனர். இதன் மூலம் இந்திய அணியின் ஆதிக்கம் மற்றும் வீரர்களின் ஆற்றல் மீண்டும் வெளிப்படும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த போட்டியில் கே.எல். ராகுல், துரூவ் ஜுரேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூவரும் சதம் விளாசினர். இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது என முன்னாள் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.
அதிக ரன்களுக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் வாய்ப்பு
இது தொடர்பாக பேசிய அவர், "இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துச் செல்லும் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்தான் என தோன்றுகிறது. இவர் தொடக்க வீரராக இருக்கும் காரணத்தினால், அதிக நேரம் களத்தில் நிற்கும் வாய்ப்பு உள்ளது. சிறந்த தாக்குதலுடன் விளையாடும் இவர் ஸ்கோர் அதிகமாக குவிப்பவர். அவர் தொடக்கத்தில் செட்டு ஆன பிறகு என்னும் விசாரணையுடன் விளையாடுகிறார்" என அபிஷேக் கூறியுள்ளார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
கடந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த சூழலில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபிஷேக் நாயர் கூறிவது போல் ஜெய்ஸ்வால் அதிக ரன்கள் குவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த தொடரில் இந்தியாவின் வெற்றி அதிக உற்சாகத்தை வழங்கும் ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த போட்டியில் படுதோல்வி அடைந்ததால், இப்போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என களமிறங்கும். அதனால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி.
மேலும் படிக்க: கம்பீர் பேச்சை கேட்கவில்லை என்றால்.. இதுதான் கதி.. ரோகித் விவகாரத்தில் முன்னாள் வீரர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









