)
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்த கலீல் அகமது சிறப்பாக பந்து வீசி இருந்தார். பவர் பிளேயரில் அதிக விக்கெட் வீழ்த்திய பலர்களின் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுவதற்கு முன்பு, இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றிருந்தார். இருப்பினும் 18 பேர் கொண்ட இந்திய அணியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில் கலீல் அகமது இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட தேர்வாகியுள்ளார். கவுதம் கம்பீரின் முன்னாள் அணியான எசெக்ஸ் அணியில் கவுன்டி கிரிக்கெட்டில் கலீல் அகமது விளையாட உள்ளார்.

கவுண்டி கிரிக்கெட்டில் இந்த சீசன் முழுவதும் கலீல் அகமது விளையாடுவார் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. கவுண்டி தொடரில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சாம்பியன்ஷிப்பில் கலீல் அகமது விளையாட உள்ளார். முதல் போட்டியில் யார்க்ஷயர் அணிக்கு எதிராக கலீல் அகமது விளையாட உள்ளார். கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் கலீல் அகமது சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணியில் அவரது பெயரும் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் மாற்று வீரராக கலீல் அகமது இடம் பெறலாம். இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்திலும் கலீல் அகமது சிறப்பாக பந்து வீசி இருந்தார்.
இந்திய அணிக்காக இதுவரை கலீல் அகமது 11 நாள் போட்டிகளிலும், 12 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். கடைசியாக 2024 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான தொடரில் இந்தியாவிற்காக விளையாடி இருந்தார், அதன் பிறகு இந்திய அணிக்காக எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. தற்போது ஐபிஎல் 2025 தொடரை தொடர்ந்து மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் சாம்பியன்ஷிப்பின் லீக் போட்டிகள் ஆகஸ்ட் 5 முதல் 26 வரை நடைபெறும். இரண்டு அரையிறுதிப் போட்டிகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடைபெறும், இறுதிப் போட்டி செப்டம்பர் 20 ஆம் தேதி நடைபெறும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ