ஐபிஎல்க்கு பிறகு ஒட்டுமொத்தமாக மாறும் இந்திய அணி! இவர்களுக்கு வாய்ப்பு இல்லை!

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணி ஒட்டுமொத்தமாக மாற உள்ளது. அடுத்ததாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர்.

Written by - RK Spark | Last Updated : May 12, 2025, 12:06 PM IST
  • விராட் கோலி, ரோஹித் ஓய்வு.
  • புதிய அணியாக மாறும் இந்தியா.
  • அடுத்து இங்கிலாந்து தொடர் நடக்கிறது.
ஐபிஎல்க்கு பிறகு ஒட்டுமொத்தமாக மாறும் இந்திய அணி! இவர்களுக்கு வாய்ப்பு இல்லை!

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜூன் 20ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த தொடர் இந்திய அணிக்கு பெரும் சவாலாக அமைய உள்ளது. காரணம் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். "டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் முதன்முதலில் விளையாடி 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையைச் சொன்னால், இந்த ஃபார்மேட் பயணம் என்னை அழைத்துச் செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. அது என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, வாழ்க்கை முழுவதும் நான் சுமக்கும் பாடங்களைக் கற்றுக் கொடுத்தது" என்று தெரிவித்துள்ளார் விராட் கோலி.

மேலும் படிங்க: ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி மற்றும் இடம்? வெளியான தகவல்!

விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளதால் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதிய இந்திய அணியை பிசிசிஐ தயார் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் கடந்து 6,7 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் தற்போது இல்லாதது பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. விராட் கோலி ஓய்வு பெற்றதால் அணியில் பும்ரா, கேஎல் ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா மட்டுமே மூத்த வீரர்களாக உள்ளனர். முகமது ஷமிக்கு காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே. ரோஹித் சர்மாவிற்கு பிறகு சுப்மான் கில்லை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓப்பனராக கே எல் ராகுல் மற்றும் எஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா தொடரிலும் இவர்கள் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தனர். மேலும் கேஎல் ராகுலுக்கு இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் உள்ளது என்பதால் அவர் ஒப்பனிங் வீரராக களம் இறங்கலாம்.  அதனை தொடர்ந்து சும்மான் கில் மற்றும் ரிஷப் பந்த் முக்கிய வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். மிடில் ஆர்டரில் சர்பராஸ்கான் மற்றும் துருவ் ஜூரில் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது, அதே சமயம் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் ஆகியோரும் இங்கிலாந்து தொடரில் இடம் பெற உள்ளனர்.

ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி இடம் பெற வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா இடம்பெறுவார்கள். இவர்களுடன் கூடுதல் வீரர்களாக அர்ஷ்தீப் சிங், ஷ்ரேயாஸ் ஐயர், மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான உத்ததேச இந்திய அணி

ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், கே.எல். ராகுல், ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி, துருவ் ஜூரல், சர்ஃபராஸ் கான், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, ஆகாஷ் தீப்.

மேலும் படிங்க: ரோகித் சர்மா இடத்தை பிடிக்க போகும் 23 வயது இளைஞர்! ஓப்பனராக இறங்க வாய்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News