Indian cricketers grief: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் AI171 என்ற போயிங் விமான விபத்துக்குள்ளான நிலையில், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விமான மேகானி நகர் பகுதியில் இருக்கும் மருத்துவ கல்லூரியின் விடுதியில் மோதியது. இதனால் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு உயிரிழந்துள்ளனர். 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கோர விபத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கிரிக்கெட் வீரர்களும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
ரோகித் சர்மா: இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அகமதாபாத்திலிருந்து மிகவும் வருத்தகரமான செய்தி, உயிரிழந்த அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரார்த்தனைகள் இவ்வாறு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார்.
விராட் கோலி: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, அகமதாபாத்தில் விமான விபத்து பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்த்தனை மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எண்ணங்கள் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
சூர்யகுமார் யாதவ்: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அகமதாபாத் - லண்டன் விமான விபத்து குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். உயிரிழந்த அனைத்து உயிர்களுக்கும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும். பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு கிடைக்க வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
முகமது சிராஜ்: இன்று (ஜுன் 12) அகமதாபாத்தில் நடந்த சம்பவம் மிகவும் துயரமானது, என்னை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியது. வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது, இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் என் இதயம் இரங்குகிறது. இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும், இந்த கடினமான தருணத்தில் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் பலத்தை வழங்கட்டும்.
ஹர்திக் பாண்டியா: இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, அகமதாபாத்தில் நடந்த விபத்து குறித்து கேள்விப்பட்டு மனம் உடைந்தது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரார்த்தனைகளும் பலமும் இவ்வாறு அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
யுவராஜ் சிங்: இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து பற்றிய செய்தி இதயத்தை உடைக்கிறது. பாதிக்கப்பட்ட பயணிகள், பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எண்ணங்களும் பிரார்த்தனைகளும். இந்த கடினமான நேரத்தில் அவர்கள் வலிமை பெறட்டும் என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங்: இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். நினைத்துப் பார்க்க முடியாத வலியையும் இழப்பையும் தாங்கிக் கொண்டிருக்கும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும். இதுபோன்ற தருணங்களில், வார்த்தைகள் போதுமானதாக இல்லை, ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிமை, தைரியம் மற்றும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் என் இதயம் துடிக்கிறது என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிங்க: MAYDAY என்றால் என்ன? விமானிகள் இந்த வார்த்தையை பயன்படுத்தவது ஏன்? முழு அர்த்தம்..
மேலும் படிங்க: குஜராத் விமான விபத்து: பலியானவர்களுக்கு தலா ரூ. 1 கோடி! டாடா குழுமம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









