ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக, கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆல்ரவுண்டர் கெய்ரோன் பொல்லார்ட் ஆகிய நான்கு வீரர்களை, மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துக் கொண்டது. இது குறித்து நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, டிரென்ட் போல்ட், ராகுல் சாஹர், குயின்டன் டி காக் போன்ற சில மேட்ச் வின்னர்களை மும்பை அணி விடுவித்தது. இருப்பினும், ஹர்திக் பாண்ட்யாவை ஏலத்தில் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.


இதற்கிடையில், ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் தக்கவைக்காததற்கான சாத்தியமான காரணம் என்னவாக இருக்கும் என்பதை வெட்டோரி கணிக்கிறார்.  


தனியார் விளையாட்டு ஊடகம் ஒன்றுடனான உரையாடலின்போது , நியூசிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி கூறிய கருத்துக்கள் இவை: "இது வெறுமனே பணத்தைப் பற்றியது, அது இருக்க வேண்டும். மும்பை இண்டியன்ஸ் (Mumbai Indians) ஹர்திக் பாண்டியாவை விட்டு விடுவதற்கான காரணங்கள் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் தக்க வைத்துக் கொள்ள முடிந்த அளவில், முதலிடத்தை பும்ராவும் ரோஹித்தும் பிடித்துக் கொண்டார்கள்."



"எனவே ஹர்திக் பாண்ட்யாவை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது  மும்பை அணியைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமானது தான். ஆனால்,  அவர், அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானவர். ஆனால், ஐபிஎல் போட்டிகளின் (Indian Premier League) சிறப்பே, முக்கியமானவர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியாதது என்பது தானே? வெற்றிக்கு முக்கியமானவர்கள் என்றாலும், மிகவும் முக்கியமானவர்கள் யார் என்ற போட்டியில் முந்துபவர்களைத் தானே ஒரு ஐபிஎல் அணி தக்க வைத்துக் கொள்ள முடியும்?" என்று வெட்டோரி கேட்கிறார்.


இதற்கிடையில், மும்பை இண்டியன்ஸ் அணியில் தக்க வைக்கப்படாத ஹர்திக் பாண்டியா, அணியுடனான தனது பயணம் பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், மும்பை அணியுடனான இந்த நினைவுகளை வாழ்நாள் முழுவதும் என்னுடன் சுமந்து செல்வேன், இங்கு அனுபவித்த தருணங்கள் எப்போதும் என்னுடனே இருக்கும். நான் உருவாக்கிய நண்பர்கள், உருவான பந்தங்கள், மக்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்... என்று தெரிவித்துள்ளார்.



அதேபோல, பஞ்சாப் கிங்ஸ் கே.எல்.ராகுலை தக்கவைத்துக் கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய வெட்டோரி, இரண்டு வீரர்களும் மிகவும் நெருக்கமாக இருப்பதால் அவர்களுக்கு இடையே ஒருவித கூட்டணி இருக்கலாம் என்று பரிந்துரைத்தார். ராகுலும், பாண்டியாவும் இணைந்து விளையாட வாய்ப்புகள் அதிகம் என்று வெட்டோரி கணிக்கிறார்.


"ஐபில் 2022 போட்டித் தொடரில் (IPL 2022) ஹர்திக் பாண்டியாவுக்கு முன்னுரிமை கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அவர் தன்னை நன்றாக வளர்த்துக் கொண்டார். ஆனால் அணியால் அவரை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. அவர் தன்னை வளர்த்துக்கொண்டதால், வேறு அணிகளும் அவரை நல்ல விலைக்கு ஏலத்தில் எடுக்கலாம். இது அவருக்கு நன்மையாக இருக்கும். கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் இணைந்து விளையாடினால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், இருவரும் ஒரே அணியால் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது" என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் கருதுகிறார்.


அவர் மேலும் கூறுகையில், "எது எப்படியிருந்தாலும், இவை அனைத்தும் இந்த நேரத்தில் கணிப்புகள் மட்டுமே! அவை நிதர்சனமாகுமா என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்துக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.


READ ALSO | இது பிசிசிஐ விதிகளுக்கு எதிரானது: சீறும் பஞ்சாப் நிர்வாகம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR