)
Andre Russell Retired Which Other Player Will Csk Target: ஐபிஎல் என்றாலே அதிரடியான ஆட்டமும் சுவாரஸ்யமும் தான். இந்த நிலையில், அத்தொடரில் இதுவரை கொல்கத்தா நைட் ரைடஸ் அணிக்காக தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆன்ட்ரே ரசல் தற்போது ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதோ இல்லையோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாக உள்ளது. அவர்களின் அதிர்ச்சிக்கு காரணமும் இருக்கிறது.
Andre Russell: ரஸலுக்கு திட்டமிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
அதாவது எதிர்வரும் ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு கேகேஆர் அணியில் இருந்து ஆன்ட்ரே ரசல் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறார். இதனால் அவரை மற்ற அணிகள் வாங்க முனைப்பு காட்டு என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வெளிநாட்டு ஆல் ரவுண்டர் தேவை என்பதால் கண்டிப்பாக ரஸலுக்கு முட்டி மோதும் என்றும் எப்படியாவது அவரை எடுத்துவிடும் என்றும் சிஎஸ்கே அணி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்த சூழலில், ரஸல் ஐபிஎல்லை விட்டே செல்வதாக கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Kolkata Knight Riders: கேகேஆர் அணியில் தொடர்ந்து பயணம்
ரஸலின் இந்த முடிவும் கேகேஆர் அணிக்காக போன்றே தெரிகிறது. அவர் வெளியிட்ட வீடியோவில் கேகேஆர் அணியின் நினைவுகளை சேர்த்தே பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் பேசி இருக்கும் அவர், கேகேஆர் அணியில் இருந்து வெளியேறிய பின், மற்ற அணிகளின் ஜெர்சியில்பார்ப்பதே வருத்தமாக இருக்கும். சில பதிவுகளை பார்க்க முடிந்தது. என்னை வேறு ஜெர்சியில் பார்த்தேன், அதனால் இரவில் தூங்க முடியவில்லை.
கேகேஆர் அணியுடன் இது குறித்து பேசினேன். அவர்கள் என் மீது உள்ள அன்பு, மரியாதையை வைத்து பவர் கோச் என்ற பொறுப்பை கொடுத்துள்ளனர். அதனால் கேகேஆர் அணியை விட்டு எங்கேயும் செல்லப்போவதில்லை. மீண்டும் சந்திக்கிறேன் என அந்த வீடியோவில் ரஸல் கூறி இருந்தார்.
Chennai Super kings: ஆன்ட்ரே ரசல் இல்லை, சிஎஸ்கே யாரை குறிவைக்கும்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் சஞ்சு சாம்சனுக்காக பேச்சுவார்த்தை நடத்தி டிரேட் மூலம் அவரை வாங்கியது. இன்னும் சில முக்கிய வீரர்களை ஐபிஎல் மினி ஏலம் மூலம் வாங்க இருக்கிறது. அந்த முக்கிய வீரர்களில் ஆன்ட்ரே ரசலும் ஒருவராக இருந்திருப்பார் என தெரிகிறது. இந்த நிலையில் ரஸல் ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பதில் எந்த வெளிநாட்டு வீரரை குறிவைக்கும் என்ற கேள்வி எழும்பி உள்ளது. ரஸல் இல்லாததால், மற்ற ஆல் ரவுண்டர்களான கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டன், கேமரூன் கிரீன் ஆகியோருக்கு குறிவைக்க வாய்ப்புள்ளது.
Cameron Green: கேம்ரூன் கிரீனுக்கு போட்டி கடுமையாக இருக்கும்
கொல்கத்தா அணியுடன் ஏலத்தில் மோதி கேம்ரூன் கிரீனை எடுக்க முற்பட வேண்டும். ஆனால் கேகேஆர் அணியிடம் சிஎஸ்கே அணியை விட பர்ஸ் தொகை அதிகம் உள்ளதால் கிரீனை வாங்கும் வாய்ப்பு சிஎஸ்கேவுக்கு மிகவும் குறைவு. இதன்மூலம், கிரீனின் டிமாண்ட் அதிகரித்திருப்பதால், அவரின் விலையும் நிச்சயம் எகிறும். இதன் காரணமாக மேக்ஸ்வெல் மற்றும் லிவிங்ஸ்டனை சிஎஸ்கே எடுக்க நினைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ