CSK vs MI IPL Ceremony: சேப்பாக்கத்தில் தொடக்க விழா.. பங்கேற்கும் ராக்ஸ்டார்!

CSK vs MI IPL Opening Ceremony: சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணி நாளை மறுநாள் மோதவுள்ள நிலையில், போட்டிக்கு முன்பாக நடக்கும் ஐபிஎல் தொடக்க விழாவில் இசையமைப்பாளர் அனிரூத் பங்கேற்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Mar 21, 2025, 07:43 PM IST
  • சென்னை - மும்பை ஐபிஎல் போட்டி நாளை மறுநாள் நடக்க உள்ளது
  • போட்டிக்கு முன்பாக தொடக்க விழா நடைபெற உள்ளது
  • அதில் இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்கிறார்
CSK vs MI IPL Ceremony: சேப்பாக்கத்தில் தொடக்க விழா.. பங்கேற்கும் ராக்ஸ்டார்!

கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) தொடங்குகிறது. கொல்கத்தாவில் தொடங்கும் இத்தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கு முன்பாக பிரமாண்ட தொடக்க விழா நடைபெற இருக்கிறது. இதில் பாலிவுட் பிரபலம் திசா பதானி நடன கலைஞராகவும் ஸ்ரேயா கோஷல் பாடகியாகவும் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

பொதுவாக ஆண்டுதோறும் ஐபிஎல்லின் தொடக்க போட்டியில் மட்டும் நடைபெறும் தொடக்க விழா, இம்முறை ஒவ்வொரு அணியின் முதல் போட்டியின் போதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 13 மைதானங்களிலும் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

மேலும் படிங்க: ஏலம் போகாத வில்லியம்சன்... ஆனாலும் ஐபிஎல் தொடரில் களமிறங்குகிறார்... அது எப்படி?

அந்த வகையில், நாளை மறுநாள் (மார்ச் 23) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடக்க விழா நடைபெற உள்ளது. அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. பொதுவாக சென்னை - மும்பை மோதிக்கொள்ளும் போட்டி என்றாலே எதிர்பார்ப்புகள் இருக்கும். தற்போது போட்டிக்கு முன்பாக தொடக்க விழா நடக்க உள்ளதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் தொடக்க விழாவில் பிரபல இசையமைப்பாலரும் பாடகருமான அனிரூத் பங்கேற்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் நடனக் குழுவினர் பங்கேற்பார்கள் என்றும் இந்த நிகழ்ச்சியானது மாலை 6.30 முதல் சுமார் 7 மணி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் மாலை 4.30 முதல் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இரு அணிக்களுக்கான கணிக்கப்பட்ட பிளேயிங் XI

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சிவம் துபே, சாம் குர்ரன், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விகீ), ஆர் அஷ்வின், நூர் அகமது, மதீஷா பத்திரனா, கலீல் அகமது.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ரியான் ரிகல்டன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், நமன் திர், மிட்செல் சாண்ட்னர், ரீஸ் டாப்லி அல்லது ஜோஃப்ரா ஆர்ச்சர், முஜிப்  உர் ரஹ்மான், கரன் சர்மா.

மேலும் படிங்க: கே.எல்.ராகுல் இல்லை.. அப்போ டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் யார்? இம்பேக்ட், பிளேயிங் XI என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News