)
Asia Cup 2025: ஆசிய கோப்பை 2025 தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி (செவ்வாய்) அன்று தொடங்க இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி மற்றும் துபாய் மைதானங்களில் விளையாடப்படும் இந்த தொடர் டி20 வடிவில் நடைபெற இருக்கிறது. செப். 28ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி உள்பட மொத்தம் 19 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஆசிய கோப்பை 2025 தொடரில் மொத்தம் 8 அணிகள் இருப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகள் ஏ பிரிவிலும்; இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங் காங் அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் இருக்கும் மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும்.
இந்த சுற்றின் முடிவில் இருப் பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். இதில் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் தலா 1 போட்டியில் மோதும். இந்த சுற்றின் முடிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்தான் செப். 28இல் துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுவார்கள். அடுத்தாண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெற இருப்பதால் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு, சிறந்த அணியை கட்டமைப்பது அனைத்து அணிகளுக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கும். டி20ஐ போட்டிகள் என்பதால் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட இயலாது.
இதனால், 8 அணிகளில் பலமான அணியாக தோற்றமளிக்கும் இந்திய அணி (Team India) கூட கொஞ்சம் அசந்தாலும் கவிழ்க்கப்பட்டுவிடும். இது டி20 போட்டிகளில் வாடிக்கையான ஒன்றுதான். எனவே, அதற்கு இடம் கொடுக்காத வகையில் இந்திய அணி உச்சபட்ச கவனத்துடன் இந்த தொடரை எதிர்கொள்ளும் எனலாம். அப்படியிருக்க, இந்திய அணி அதன் சிறப்பான பிளேயிங் லெவனை கண்டறிவதும் முக்கியம். தற்போது 15 வீரர்கள் தேர்விலேயே பல விமர்சனங்களும், சர்சைகளும் கிளம்பியிருக்கும் நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பிளேயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவருக்கும் எழுந்திருக்கிறது.
முதல் சுற்றை பொருத்தவரை, செப். 10இல் ஐக்கிய அரபு அமீரகம் உடனான போட்டியிலும், செப். 19இல் ஓமன் உடனான போட்டியிலும் பும்ரா விளையாட மாட்டார் என்பது ஏறத்தாழ உறுதி. அதேபோல், ஒரு சில முக்கிய வீரர்களுக்கும் இவ்விரு போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டு, அவர்கள் செப். 14இல் நடைபெறும் பாகிஸ்தான் போட்டிகளில் மட்டும் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த மூன்று போட்டிகளையும் கணக்கில் கொண்டு சூப்பர் 4 சுற்றுக்கு முன் சிறப்பான பிளேயிங் லெவன் காம்பினேஷனை இந்தியா தேர்வு செய்யலாம்.
இந்நிலையில், முதல் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எந்த காம்பினேஷனில் விளையாடப்போகிறது என்ற கேள்விதான் முதலில் எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான பிளேயிங் லெவனில் வருண் சக்ரவர்த்தி (Varun Chakaravarthy) மற்றும் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) இருவருக்கும் வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் மைதானங்கள் மெதுவான தன்மையை கொண்டிருப்பதால் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இருக்கும். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் முத்தரப்பு தொடர் நடைபெற்ற வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது நபி, நூர் அகமது, அல்லா கசன்ஃபர், ரஷித் கான் என 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியிருந்தது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் ஏற்கெனவே அக்சர் பட்டேல் பிளேயிங் லெவனில் இருப்பார் என்பதால் மூன்று சுழற்பந்துவீச்சு மற்றும் மூன்று வேகப்பந்துவீச்சு ஆப்ஷன் கிடைக்கும். ஒருவேளை நம்பர் 8 வரை பேட்டிங் வேண்டுமென்றால் ஒரு வேகப்பந்துவீச்சாளரை மட்டும் வைத்துக்கொண்டு சிவம் தூபேவை சேர்க்கலாம். இதனால் பேட்டிங்கும் நம்பர் 8 வரை இருக்கும். மூன்று வேகப்பந்துவீச்சாளர் ஆப்ஷனும் கிடைக்கும். நிச்சயம் குல்தீப் மற்றும் வருண் சக்ரவர்த்தி 8 ஓவர்களை வீசிவிடுவார்கள். அதில் பவர்பிளே ஓவரிலேயே வருண் ஓரிரு ஓவரை வீசிவிடுவார். எனவே மூன்றாவது வேகப்பந்துவீச்சாளர் 1-2 ஓவர்களை போட்டாலே போதுமானது. எனவே, அக்சர் பட்டேலுக்கு பதில் தூபேவை விளையாட அதிக வாய்ப்புள்ளது.
ஒருவேளை இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் பிளேயிங் லெவனில் (Team India Playing XI) வைத்துக்கொண்டால், காம்பினேஷன் எப்படி அமைக்கலாம் என்பதை இங்கு பார்க்கலாம். மூன்று காம்பினேஷன்கள் இதோ...
காம்பினேஷன் 1: சுப்மான் கில், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்
காம்பினேஷன் 2: சுப்மான் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் (அ) சிவம் தூபே, ஜித்தேஷ் சர்மா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்
காம்பினேஷன் 3: சுப்மான் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் தூபே, அக்சர் பட்டேல் (அ) ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ