Asia Cup 2025: இந்தியா vs பாகிஸ்தான் மீண்டும் மோதல் - சூப்பர் 4 அட்டவணை இதோ!

Asia Cup 2025 Super 4: ஆசிய கோப்பை 2025 தொடரில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத உள்ளது. சூப்பர் 4 சுற்றின் முழு அட்டவணையை இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 18, 2025, 02:20 PM IST
  • ஆசிய கோப்பை குரூப் போட்டிகள் நாளை முடிகிறது.
  • சூப்பர் 4 போட்டிகள் சனிக்கிழமை தொடங்குகிறது.
  • இந்தியா - பாகிஸ்தான் ஞாயிற்றுகிழமை தொடங்குகிறது.
Asia Cup 2025: இந்தியா vs பாகிஸ்தான் மீண்டும் மோதல் - சூப்பர் 4 அட்டவணை இதோ!

Asia Cup 2025, Super 4 Probable Schedule: ஆசிய கோப்பை 2025 தொடர் கடந்த செப். 9ஆம் தேதி தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

Add Zee News as a Preferred Source

Asia Cup 2025: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை தகுதி

ஆசிய கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நாளையுடன் (செப். 19) நிறைவடைகிறது. பாகிஸ்தான் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதனால், ஏ பிரிவில் எதிர்பார்த்தபடி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. பி பிரிவில் இலங்கை அணி சூப்பர் 4  சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. ஆப்கானிஸ்தான் அல்லது வங்கதேசம் அணிகளில் ஒன்று சூப்பர் 4 சுற்றுக்கு வரலாம்.

Asia Cup 2025: வங்கதேசமா? ஆப்கானிஸ்தானா? இன்று தெரியும்

குரூப் சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டும் மீதம் உள்ளன. அந்த வகையில், இன்று நடைபெறும் போட்டி முக்கியமான போட்டியாகும். ஆப்கானிஸ்தான் அணி வாழ்வா, சாவா என்ற கட்டத்தில் இலங்கை அணியுடன் இன்று அபுதாபியில் மோதுகிறது. ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றாலே போதுமானது, வங்கதேசம் தொடரை விட்டுவெளியேறிவிடும். வங்கதேசம் அனைத்து போட்டிகளையும் விளையாடிவிட்டது, ஆனாலும் ஆப்கானிஸ்தானை விட நெட் ரன்ரேட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, ஆப்கானிஸ்தான் இன்று வெற்றி பெற்றால் சூப்பர் 4 சுற்று உறுதியாகிவிடும். தோல்வியடையும்பட்சத்தில் வங்கதேசம் தகுதிபெறும்.

Asia Cup 2025: A1 இந்தியா, A2 பாகிஸ்தான்

இதன்படி சூப்பர் 4 சுற்றில் மூன்று அணிகள் உறுதியாகிவிட்டன. ஆனாலும் இரண்டு இடங்கள் மட்டும் தற்போது உறுதியாகி உள்ளது. புள்ளிப்பட்டியில் இந்தியா, பாகிஸ்தான் முறையே முதலிரண்டு இடங்களை பிடித்தன. அதாவது, A1 ஆக இந்தியா, A2 ஆக பாகிஸ்தான் ஆகும். இந்தியா நாளை ஓமன் நாட்டுக்கு எதிராக படுமோசமாக தோற்றாலும் நெட் ரன்ரேட் கில்லியாக (+4.793) இருக்கிறது. எனவே இது உறுதி.  

Asia Cup 2025: பி பிரிவு நிலவரம்

B1 பெரும்பாலும் இலங்கை அணியாக இருக்கும் என கூறினாலும், ஆப்கானிஸ்தான் இலங்கையைவிட நெட் ரன்ரேட்டில் அதிகம் உள்ளது. ஒருவேளை ஆப்கானிஸ்தான் இன்று வெற்றி பெற்றால் அந்த அணிதான் B1 ஆக வரும், இலங்கை B2 ஆக வரும், வங்கதேசம் வெளியேறும். தோல்வியடையும்பட்சத்தில் B1 ஆக இலங்கையும், B2 ஆக வங்கதேசமும் இருக்கும், ஆப்கானிஸ்தான் வெளியேறும். அந்த வகையில், இந்த சூழலில் சூப்பர் 4 அட்டவணை எப்படி இருக்கும் என்பதை இங்கே உத்தேசமாக காணலாம்.

Asia Cup 2025: சூப்பர் 4 உத்தேச அட்டவணை

செப். 20 (சனி) - ஆப்கானிஸ்தான்/இலங்கை (B1) vs இலங்கை/வங்கதேசம் (B2) - துபாய் 

செப். 21 (ஞாயிறு) - இந்தியா (A1) vs பாகிஸ்தான் (A2) - துபாய் 

செப். 23 (செவ்வாய்) - பாகிஸ்தான் (A2) vs ஆப்கானிஸ்தான்/இலங்கை (B1) - அபுதாபி

செப். 24 (புதன்) - இந்தியா (A1) vs இலங்கை/வங்கதேசம் (B2) - துபாய்

செப். 25 (வியாழன்) - பாகிஸ்தான் (A2) vs இலங்கை/வங்கதேசம் (B2) - துபாய்

செப். 26 (வெள்ளி) - இந்தியா (A1) vs ஆப்கானிஸ்தான்/இலங்கை (B1) - துபாய்

மேலும் படிக்க | இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீண்டும் கன்பார்ம் - எப்போது? இலவசமாக பார்ப்பது எப்படி?

மேலும் படிக்க | ஆசிய கோப்பை: அடம்பிடித்த பாகிஸ்தான் அணி.. தாமதமான யுஏஇ போட்டி - காரணம் இதுதான்!

மேலும் படிக்க | ஆசிய கோப்பை: புள்ளிப்பட்டியல் அப்டேட் - சூப்பர் 4 சுற்றுக்கு செல்லப்போவது யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News