இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், மே 30, 2025 அன்று தொடங்கவுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியா 'ஏ' அணியை அறிவித்துள்ளது. இந்த அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பல முக்கிய உள்நாட்டு மற்றும் சில சர்வதேச வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சமீப காலமாக இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக தனது திறமையை வெளிப்படுத்தி வரும் யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார். இவர் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் போட்டிகள் நிறைவடைந்ததும் டெஸ்ட் அணியின் இணைவார். மறுபுறம் கவுண்டி கிரிக்கெட்டில் சமீபமாக சிறப்பாக செயல்பட்ட மூத்த வீரர் கருண் நாயர், ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர், நிதிஷ் ரெட்டி உள்ளிட்ட பலர் இந்த அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய சீனியர் அணிக்கு இந்த அணியில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது. மேலும், ஐபிஎல் தொடரில் தற்போது குஜராத் அணி முதல் இடத்தில் இருப்பதால், அந்த அணி நிச்சயம் பிளே ஆஃப் செல்லும். ஒருவேளை இறுதி போட்டிக்கு செல்லும் பட்சத்தில், ஜூன் 6ஆம் தேதி நடைபெற இருக்கும் இத்தொடரின் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் அணியின் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்குர், இஷான் கிஷன் (விகீ), மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் காம்போஜ், அன்ஷ் கம்புட், அன்ஷ் கம்புட், கெய்க்வாட், சர்பராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே.
மேலும் படிங்க: ஆர்சிபிக்கு ஏற்பட்ட பிரச்சனை.. கேகேஆர் எதிரான போட்டி நடைபெறுமா?
மேலும் படிங்க: ஐபிஎல் 2025 : டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விழுந்த அடி.. 3 முக்கிய பிளேயர்கள் இல்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ