ஐபிஎல் தொடரின் 19வது போட்டி நேற்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் டைட்டனஸ் அணியும் மோதின. இதில் முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து 8 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அதனைத் துரத்திய குஜராத் அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பிசிசிஐ போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாக விதித்துள்ளது. இது தொடர்பான மேட்ச் ரெப்ரீ ஜவகல் ஸ்ரீநாத் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய போது ஐபிஎல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டார். அதற்காக அவருக்கு போட்டி சம்பளத்தில் இருந்து பிசிசிஐ 25 சதவீதம் அபராதம் விதிப்பதாகவும் கூறினார். மேலும், ஒரு டிமெரிட் புள்ளி வழங்குவதாகவும் அறிவித்து இருக்கிறார்.
ஐபிஎல் நடத்தை விதிகளில் படி பிரிவு 2.2, போட்டியின்போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது ஆடைகள் மைதான உபகரணங்கள் அல்லது சாதனங்கள் மற்றும் பொருத்துதல்களை துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பான விதிகளின் கீழ் இஷாந்த் சர்மாவுக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இஷாந்த் சர்மா இந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 53 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். நேற்றைய போட்டியில் குஜராத் அணி பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மாவே அதிக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபட்சமாக ரஷித் கான் விக்கெட்களை கைப்பற்றாமல் 4 ஓவர்களில் 31 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். மற்ற பந்து வீச்சாளர்களான சாய் கிஷோர் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்களையும் முகமது சிராஜ் 4 விக்கெட்களை கைபற்றி வெறும் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இந்த அணி அடுத்த போட்டியாக நாளை மறுநாள் (ஏப்ரல் 09) அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடன் மோதுகிறது. இப்போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
மேலும் படிங்க: பும்ரா வந்ததால் நீக்கப்படும் 2 முக்கிய வீரர்கள்! மும்பை பிளேயிங் 11 இது தான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









