ஐபிஎல் பரிசுத் தொகை பாதியாக குறைப்பு.. இந்த சீசனில் சாம்பியனுக்கு எவ்வளவு கிடைக்கும்
பி.சி.சி.ஐ அமைப்பு செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளதால், இந்த வருடத்திற்காக ஐ.பி.எல் தொடரின் பரிசுத் தொகை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுக்குறித்து பார்ப்போம்.
புது டெல்லி: செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, இந்த சீசனில் ஐபிஎல் சாம்பியன் (IPL Champion) மற்றும் ரன்னர்-அப் இடத்திற்காக பரிசுத் தொகையை பாதியாக குறைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India) முடிவு செய்துள்ளது. இது வரவிருக்கும் தொடருக்கான செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். அனைத்து ஐபிஎல் உரிமையாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது, அதில் ஐபிஎல் 2020 சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ .20 கோடிக்கு பதிலாக, இப்போது ரூ .10 கோடி மட்டுமே பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான IPL சீசன் மார்ச் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது.
செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அணிகளுக்கு கொடுக்கப்படும் வெகுமதிகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. சாம்பியன்களுக்கு ரூ .20 கோடிக்கு பதிலாக ரூ .10 கோடி கிடைக்கும். அதேபோல இரண்டாவது இடத்தில் இடம் பெரும் அணிக்கு ரூ .12.5 கோடிக்கு பதிலாக 6.25 கோடி ரூபாய் கிடைக்கும் என்று பி.டி.சி.ஐ (BCCI) அறிவிதுள்ளதாக பி.டி.ஐ (PTI) செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியாமல் இருக்கும் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் அணிகளுக்கு தலா ரூ .4.3 கோடி கிடைக்கும்.
"உரிமையாளர்கள் அனைவரும் நல்ல நிலையில் தான் உள்ளனர். அவர்களின் வருமானத்தை உயர்த்த ஸ்பான்சர்ஷிப் போன்ற பல வழிகளும் உள்ளன. எனவே பரிசுத் தொகை குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ மூத்த வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் எட்டு மணி நேரத்திற்கும் குறைவான விமானம் பயணம் மேற்கொள்ளப்படும் ஆசிய நாடுகளுக்கு (இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) முன்பு போல வணிக வகுப்புகளை பயன்படுத்த மிடில் அளவிலான பி.சி.சி.ஐ ஊழியர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.