இந்த 4 வீரர்களை சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கிய பிசிசிஐ!

BCCI central contracts 2024-25: பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர சம்பளம் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் சில வீரர்கள் சேர்க்கப்படும், சிலர் நீக்கப்பட்டும் உள்ளனர்.

Written by - RK Spark | Last Updated : Apr 21, 2025, 12:07 PM IST
  • பிசிசிஐ வெளியிட்ட சம்பள பட்டியல்.
  • ஷ்ரேயாஸ் ஐயர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
  • சிலரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இந்த 4 வீரர்களை சம்பள பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கிய பிசிசிஐ!

BCCI central contracts 2024-25: இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் ஒவ்வொரு போட்டிக்கும் சம்பளம் வழங்கப்படும். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என போட்டிகளுக்கு தகுந்தார் போல் இந்த சம்பளம் மாறும். இது தவிர ஒவ்வொரு வீரர்களுக்கும் வருடாந்திர அடிப்படையில் பிசிசிஐ சம்பளம் வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு முறை மாறுபடும். கிரிக்கெட் வீரர்களுக்கு A+, A, B, C என்ற கிரேட் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த வருடாந்திர காண்ட்ராக்டில் இடம் பெற ஒரு வீரர் குறைந்தது 3 டெஸ்ட், 8 ஓடிஐ அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். இந்த சம்பளப் பட்டியலில் ஒவ்வொரு வருடமும் சில வீரர்களின் பெயர்கள் சேர்க்கப்படும், சிலரின் பெயர்கள் நீக்கப்படும். இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள சம்பள பட்டியலில் யார் யார் பெயர் நீக்கப்பட்டுள்ளது மற்றும் யார் யார் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை பற்றி பார்ப்போம்.

மேலும் படிக்க | ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்ததா சென்னை? தோனி சொன்ன முக்கிய தகவல்!

A+ கேட்டகிரியில் கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்த ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜாவின் பெயர்கள் மாற்றப்படாமல் அப்படியே உள்ளது. இவர்கள் அனைவருக்கும் வருடத்திற்கு ரூபாய் 7 கோடி சம்பளமாக வழங்கப்படும். அடுத்ததாக A கேட்டகிரியில் முகமது சிராஜ், கே எல் ராகுல், சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பந்த் ஆகியயோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு வருடத்திற்கு 5 கோடி சம்பளமாக வழங்கப்படும். B கேட்டகிரியில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜெய்ஸ்வால் மற்றும் ஷ்ரேயார் ஐயர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு வருடத்திற்கு 3 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். கடந்த வருடம் மோசமாக விளையாடியதால் நீக்கப்பட்ட ஐயர், மீண்டும் சம்பள பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

C கேட்டகிரியில் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் வீரர்களின் பட்டியலில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் படிதார், துருவ் ஜூரல், சர்பராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் ஷர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். செப்டம்பர் 30, 205 ஆம் ஆண்டு வரை இந்த காண்ட்ராக்ட் செல்லுபடி ஆகும். இந்த சம்பள பட்டியலில் புதிதாக ஹர்ஷித் ராணா, அபிஷேக் சர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் இணைந்துள்ளனர்.

சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வீரர்கள்

கடந்தாண்டு பிசிசிஐயின் வருடாந்திர சம்பளப் பட்டியலில் இடம்பெற்று இருந்த அவேஷ் கான், கே.எஸ்.பரத், ஜித்தேஷ் சர்மா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இந்த ஆண்டு இடம்பெறவில்லை. இவர்கள் அனைவரும் கடந்தாண்டு இந்திய அணிக்காக விளையாடாததால் இவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | இனி சென்னை அணியில் அஸ்வினிற்கு வாய்ப்பு இல்லையா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News