IPL 2026 Schedule: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அரையிறுதி போட்டி நாளை (மார்ச் 4), நாளை மறுதினம் (மார்ச் 5) நடைபெற இருக்கிறது. வரும் மார்ச் 8ஆம் தேதி (ஞாயிறு) இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.
கிரிக்கெட் விருந்து
டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் சர்வதேச ஆடவர் கிரிக்கெட்டுக்கு ஒரு சின்ன பிரேக் இருக்கும். தொடர்ச்சியாக நடைபெற்ற வந்த நிலையில், வீரர்களுக்கு சற்று ஓய்வு கிடைக்கும் எனலாம். மார்ச் மாத இறுதியில் உலகின் பிரம்மாண்ட டி20 லீக் தொடரான ஐபிஎல் தொடங்க இருக்கிறது. மார்ச் இறுதியில் இருந்து மே மாத இறுதிவரை இத்தொடர் நீளும் என்பதால் அந்த 60 நாள்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தினந்தினம் விருந்து காத்திருக்கிறது எனலாம்.
ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்
இந்தச் சூழலில், ஐபிஎல் 2026 சீசனுக்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஹோம் கிரவுண்டான சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடக்குமா?, தொடக்கப்போட்டியில் எந்தெந்த அணிகள் எங்கு மோதும்? உள்ளிட்டவற்றை அறிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.
5 மாநில தேர்தல்
அதுமட்டுமின்றி அசாம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரியில் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியையும், அட்டவணையுயம் தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்தச் சூழலில், பிசிசிஐ நிர்வாகமும் ஐபிஎல் தேதியை அறிவிக்க தாமதம் காட்டி வருகிறது.
தேர்தலால் வரும் சிக்கல்
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் மைதானமாகும். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா நகரில் இருக்கும் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடும் மைதானமாகும். அசாம் தலைநகர் கௌகாத்தியில் உள்ள பரஸ்பரா ஏசிஏ மைதானம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இரண்டாவது ஹோம் மைதானமாக பார்க்கப்படுகிறது. இந்த 3 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால்தான் ஐபிஎல் அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் அட்டவணை தாமதமாவது ஏன்?
இந்நிலையில், ஐபிஎல் 2026 சீசனின் அட்டவணை அதிகாரப்பூர்வமாக எப்போது வெளிவரும் என்ற கேள்விக்கு பிசிசிஐ கௌரவ தலைவர் தேவ்ஜித் சைக்கியா இன்று (மார்ச் 3) பதில் அளித்தார். Times Of India ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "ஐபிஎல் அட்டவணைக்கு இரண்டு, மூன்று நாள்கள் தயவுசெய்து காத்திருங்கள். முடிந்தவரை கூடிய விரைவில் நாங்கள் வெளியிடுவோம். தாமதமாகிவிட்டது என்பது எங்களுக்கு தெரிகிறது, ஏனென்றால் அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு என மூன்று அல்லது நான்கு மாநில தேர்தல் நடைபெற இருக்கின்றன" என்றார்.
காத்திருக்கும் பிசிசிஐ
மேலும், ஐபிஎல் அட்டவணையை அறிவிப்பதற்கு முன் தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து தெளிவுபெற பிசிசிஐ காத்திருக்கிறது. தேர்தல் நடைபெறும் போது போட்டிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்படும் என்பதால் பிசிசிஐ காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இருப்பினும், மார்ச் 28ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதிவரை ஐபிஎல் 2026 தொடர் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதுவும் உறுதியாகவில்லை.
ஆர்சிபி vs சிஎஸ்கே மோதலா?
அதேநேரத்தில், ஐபிஎல் 2026 சீசனில் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் அணி அதன் ஹோம் மைதானத்தில் மோதும். அதன்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் போட்டியில் விளையாட அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை சின்னசாமி மைதானத்தில் விளையாட ஒப்புதல் அளிக்கப்பட்டால், முதல் போட்டி அங்கேயே நடைபெறும். மேலும், முதல் போட்டியிலேயே தொடரை சூடுபிடிக்க வைக்க, ஆர்சிபி அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மோதவைக்க பிசிசிஐ திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | சஞ்சு சாம்சன் மனைவி யார் தெரியுமா? சாருலதா ரமேஷ் பற்றிய சுவாரஸ்ய தகவல்!
மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையில் கலக்கிய டாப் 6 ஐபிஎல் வீரர்கள்! லிஸ்ட்டில் ஒரே ஒரு CSK வீரர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









