Rajeev Shukla BCCI president: பிசிசிஐயின் புதிய தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது தலைவரான இருக்கும் ரோஜர் பின்னிக்கு 70 வயது ஆக உள்ளதால் பிசிசியின் விதிகள் படி அவருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இதனால் கடந்த ஐந்தாண்டுகளாக பிசிசிஐயின் துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக கூறப்படுகிறது. சவுரவ் கங்குலிக்கு பிறகு பிசிசிஐயின் தலைவராக ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் படிங்க: Glenn Maxwell odi records: மேக்ஸ்வெல்லின் ஓடிஐ சாதனைகள் என்னென்ன? முழு லிஸ்ட்!
கடந்த 2022 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ரோஜர் பின்னிக்கு ஜூலை 19ஆம் தேதியுடன் 70 வயது ஆரம்பமாகிறது. இதனால் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார் என்று கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக 65 வயதாகும் ராஜீவ் சுக்லாவை தலைவர் பதிவியில் அமர வைக்க பிசிசிஐயின் முக்கிய தலைவர்கள் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இது போன்ற சூழ்நிலைகளில் அடுத்த கட்டத்தில் இருக்கும் மூத்த நிர்வாகிகள் தான் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அடுத்த பிசிசிஐ தலைவருக்கான தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதுவரை ராஜீவ் சுக்லா இந்த பொறுப்பில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் ராஜ்யசபா எம்பியாக இருந்த ராஜீவ் சுக்லா ஐபிஎல்-ன் தலைமைப் பொறுப்பிலும் இருந்துள்ளார். எனவே இது அவருக்கு பெரிய தலைவலியாக இருக்காது. ராஜீவ் சுக்லாவிற்கு முன்பு சி கே கண்ணா இதே போல தற்காலிக பிசிசிஐ தலைவராக பணியாற்றியுள்ளார். 2017 முதல் 2019 வரை இவர் பிசிசிஐ தலைவராக பணியாற்றி இருந்தார்.
ரோஜர் பின்னி பிசிசிஐ தலைவர் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு கர்நாடகா ஸ்டேட் கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராக 3 ஆண்டுகள் பதவி வகித்திருந்தார். 1983 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக ஒரு நாள் உலகக் கோப்பை வென்ற அணியில் ரோஜர் பின்னி கபில்தேவ் தலைமையில் விளையாடியிருந்தார். அதன் பின்பு இந்திய U19 அணிக்கும் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி இருந்தார் ரோஜர் பின்னி.
மேலும் படிங்க: 'ஈ சாலா கப் நம்தே'.. இவர் தான் ஆட்டநாயகன்.. டேவிட் வார்னர் உறுதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









