ஜோ ரூட் ராஜினாமா குறித்து மவுனம் கலைத்த பென் ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் ராஜினாமா செய்தது குறித்து பென் ஸ்டோக்ஸ் மவுனம் கலைத்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 15, 2022, 04:30 PM IST
  • கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜோ ரூட்
  • பென் ஸ்டோக்ஸ் உருக்கமான பதிவு
  • ஜோ ரூட்டின் பணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்
ஜோ ரூட் ராஜினாமா குறித்து மவுனம் கலைத்த பென் ஸ்டோக்ஸ்  title=

இங்கிலாந்து அணியின் சிறந்த கேப்டன்களுள் ஒருவராக பார்க்கப்பட்ட ஜோ ரூட், அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமா இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒரு கேப்டனாக இங்கிலாந்து அணியை டெஸ்ட் போட்டியில் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்ற ஜோ ரூட், இங்கிலாந்து அணியின் டெஸ்ட் போட்டிகளுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். குறுகிய வடிவிலான போட்டிகளை ஆடாமல் டெஸ்ட் போட்டிகளில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தினார்.

மேலும் படிக்க | சச்சின் காலில் விழுந்த பஞ்சாப் அணியின் பயிற்சியாளர்

அவர் கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்து ரூட்டின் நெருங்கிய நண்பர் பென் ஸ்டோக்ஸ் மவுனம் கலைத்துள்ளார். தன்னுடைய பதிவில் மனமுருகி ரூட்டுக்கு ஸ்டோக்ஸ் நன்றி தெரிவித்துள்ளார். தன்னுடைய பயணம் ரூட்டுடன் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள அவர், அவருடன் மைதானத்தில் களமிறங்கிய நாட்கள் கிடைத்தது பெரும் பாக்கியம் எனக் கூறியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட்டுக்காக தன்னால் இயன்ற அனைத்தையும் ரூட் கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ள ஸ்டோக்ஸ், தியாகம் மற்றும் கடின உழைப்புக்கு நன்றி எனக் கூறியுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர்களில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது. இதனால் கடும் விமர்சனத்தை சந்தித்தால் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து ஜோ ரூட் யோசித்து வந்தார். இந்நிலையில், தன்னுடைய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.  ஓய்வு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது வாழ்கையில் எடுக்க வேண்டிய மிகவும் சவாலான மற்றும் கடினமான முடிவு எனக் கூறியுள்ளார். 

குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களுடன் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்ததாக தெரிவித்துள்ள ரூட், முடிவை அறிவிக்க இது சரியான நேரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். "எனது நாட்டிற்கு கேப்டனாக இருந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளை பெருமையுடன் திரும்பிப் பார்ப்பேன். இங்கிலாந்து அணிக்காக செய்த பணிகளை மறக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு அலயஸ்டர் குக் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஜோ ரூட் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அடுத்ததாக பென்ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க | கோலியை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து விலகிய மற்றொரு வீரர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News