IPL 2025, PBKS vs CSK Playing XI Changes: ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், லீக் போட்டிகள் தினமும் நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் 3 போட்டிகளை விளையாடிவிட்டன, ஹைதராபாத் அணி 5 போட்டிகளை விளையாடி கடைசி இடத்தில் உள்ளது. டெல்லி, பஞ்சாப், ஆர்சிபி அணிகள் மட்டும் 3 போட்டிகளை விளையாடி உள்ளன.
இந்நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதை தொடர்ந்து, 22வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. முலான்பூரில் நடைபெறும் இந்த போட்டி நாளை (மார்ச் 25) நடைபெற இருக்கிறது.
PBKS vs CSK: பெரிய வித்தியாசத்தில் தோற்ற பஞ்சாப்
பஞ்சாப் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஹோம் மைதானமான முலான்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அதுவும் 50 ரன்கள் வித்தியாசத்தில் பெரியளவில் தோல்வியை சந்தித்தது. பலமான பேட்டிங் யூனிட் இருந்தும் 206 ரன்கள் இலக்கை அவர்களால் துரத்த இயலவில்லை.
PBKS vs CSK: பேட்டிங்கை பலப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
எனவே, சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சில மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது. அந்த வகையில், பேட்டிங்கை மேலும் பலப்படுத்த மார்கஸ் ஸ்டாய்னிஸ் அல்லது கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரில் ஒருவரை மட்டும் சேர்த்துவிட்டு, ஜாஷ் இங்கிலிஸை அணிக்குள் கொண்டுவர வேண்டும். அவர் ஓபனிங்கில் இறங்கும்பட்சத்தில் பிரியான்ஷ் ஆர்யாவை வெளியே அமரவைக்கலாம். அவருக்கு பதில் ஹர்பிரீத் பிராரை சேர்க்க வேண்டும்.
PBKS vs CSK: கூடுதல் ஸ்பின்னர் தேவை
இல்லையெனில் கண்டிப்பாக பிரியான்ஷ் ஆர்யா ஓபனிங்கில் இறங்க வேண்டும் என்றால் சூர்யன்ஷ் ஷெட்கேவை வெளியே வைத்துவிட்டு ஹர்பிரீத் பிரரை சேர்க்கலாம். இந்த மாற்றங்களே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு போதுமானது.
PBKS vs CSK: பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்
பிரப்சிம்ரன் சிங் - பிரியான்ஷ் ஆர்யா ஓபனராகவும்; ஷ்ரேயாஸ் ஐயர் - நேஹல் வாதேரா - ஜாஷ் இங்கில்ஸ் - கிளென் மேக்ஸ்வெல் - ஷஷாங்க் சிங் - மார்கோ யான்சன் ஆகியோர் மிடில் ஆர்டரிலும்; அர்ஷ்தீப் சிங் - லாக்கி பெர்குசன் - யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் பந்துவீச்சிலும் போதும். இம்பாக்ட் வீரராக ஹர்பிரீத் பிரரை கொண்டுவரலாம்.
PBKS vs CSK: சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன்
சிஎஸ்கே பிளேயிங் லெவனை பொறுத்தவரை பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. கான்வே - ரச்சின் ரவீந்திரா நிச்சயம் ஓப்பனிங்கில் வருவார்கள். ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், விஜய் சங்கர், ஷிவம் தூபே, ஜடேஜா, தோனி ஆகியோர் மிடில் ஆர்டரில் இரு்பபார்கள். நூர் அகமது, அன்ஷூல் கம்போஜ், பதிரானா ஆகியோர் பந்துவீச்சில் கைக்கொடுப்பார்கள். இம்பாக்ட் வீரராக கலீல் அகமது வருவார்.
மேலும் படிக்க | பும்ரா வந்ததால் நீக்கப்படும் 2 முக்கிய வீரர்கள்! மும்பை பிளேயிங் 11 இது தான்!
மேலும் படிக்க | Exclusive: சிஎஸ்கே தோல்விக்கு பிசிசிஐ போட்ட இந்த கண்டிஷன் தான் காரணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









