வலிமையான இங்கிலாந்தை வீழ்த்த... இந்த 3 வீரர்கள் முக்கியம் - பிளேயிங் லெவன் மாற்றங்கள்

Team India: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் இந்த மூன்று வீரர்கள் சேர்க்கப்பட வேண்டும். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 26, 2025, 01:55 PM IST
  • இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை.
  • 2வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 2ஆம் தேதி தொடங்குகிறது.
  • பும்ரா அடுத்த போட்டியில் விளையாடுவாரா இல்லை என்பது தெரியவில்லை.
வலிமையான இங்கிலாந்தை வீழ்த்த... இந்த 3 வீரர்கள் முக்கியம் - பிளேயிங் லெவன் மாற்றங்கள்

India National Cricket Team: ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை (Anderson - Tendulkar Trophy 2025) தொடரில் தற்போது இங்கிலாந்து - இந்தியா அணிகள் (England vs India) மோதி வருகின்றன. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Add Zee News as a Preferred Source

England Playing XI Changes: இங்கிலாந்தில் 1 மாற்றத்திற்கு வாய்ப்பு

இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் (Edgbaston Test) மைதானத்தில் வரும் ஜூலை 2ஆம் தேதி தொடங்கி ஜூலை 6ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இங்கிலாந்து அணி (Team England) கடந்த போட்டியில் வலிமையான பேட்டிங் காரணமாக வெற்றி வாகை சூடியது. பந்துவீச்சு இன்னும் கூடிவரவில்லை. ஸ்டோக்ஸ் மற்றும் பஷீர் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார்கள். 

மற்ற 3 வேகப்பந்துவீச்சாளர்களில் கிறிஸ் வோக்ஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 1 விக்கெட்தான் எடுத்திருந்தார். கார்ஸே 4 விக்கெட்டுகள், ஜோஷ் டங் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஜோஷ் டங் வீழ்த்திய 7 விக்கெட்டுகளில் 4 விக்கெட்டுகள் டெயிலெண்டர்கள். எனினும், அனுபவர வீரர் வோக்ஸ், ஜோஷ் டங் பிளேயிங் லெவனில் தொடர்வதில் பிரச்னை இருக்காது. கார்ஸே புது பந்தில் கைக்கொடுத்தாலும், பந்து பழையதானதும் அவர் சோபிக்கவில்லை. அவருக்கு பதில் சாம் குக்கை முயற்சித்து பார்க்கலாம்.

Team India: பும்ரா விளையாடுவாரா...? மாட்டாரா..?

அதே நேரத்தில், இந்திய அணியை (Team India) பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) அடுத்த போட்டியில் இருப்பாரா இல்லையா என்பதுதான் ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது. பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என கூறப்படுகிறது. அப்படியிருக்க முதல் போட்டியில் அவர் விளையாடிவிட்டார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 44 ஓவர்களை வீசியிருக்கிறார் பும்ரா. போட்டி முடிந்து ஒரு வாரக்காலம் அடுத்த போட்டிக்கு ஓய்வு இருக்கிறது. 

இந்திய அணி பும்ரா விளையாடிய முதல் போட்டியில் தோல்வியடைந்திருப்பதன் மூலம் அவருக்கு அழுத்தம் அதிகமாகியிருக்கிறது. இதனால் அவர் 2வது போட்டியில் விளையாடுவாரா அல்லது ஜூலை 10ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை பும்ரா விளையாடவில்லை என்றால் அந்த இடத்தில் அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh) விளையாடுவார்.

Team India: அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஏன் தேவை?

பும்ரா விளையாடினாலும் கூட அர்ஷ்தீப் விளையாடுவார். சிராஜ், பிரசித் இருவரில் ஒருவருக்கு ஓய்வளிக்க வேண்டும். அர்ஷ்தீப் பந்து புதிதாக இருக்கும்போது இரண்டு பக்கங்களும் ஸ்விங் செய்யும் திறன்கொண்டவர். எனவே, 2வது போட்டியில் அவர் முக்கியம். அதேபோல், ஷர்துல் தாக்கூருக்கு பதில் குல்தீப் யாதவை (Kuldeep Yadav) நம்பர் 8இல் விளையாடவைக்க வேண்டும். நம்பர் 7 வரை வலிமையான பேட்டிங் ஆப்ஷன் இருந்தால் போதுமானது. இதிலேயே 5 பௌலிங் ஆப்ஷன் வந்துவிடும். 

Team India: யாருக்கு பதில் நிதிஷ் குமார் ரெட்டி?

4வது வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படும்பட்சத்தில் சாய் சுதர்சன் அல்லது கருண் நாயர் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நிதிஷ்குமார் ரெட்டியை (Nitish Kumar Reddy) விளையாட வைக்கலாம். அவர் பேட்டிங்கில் சிறப்பாக வீசுவார். ஷர்துல் தாக்கூர் வீசிய 10-15 ஓவர்களை அவரும் வீசுவார். பேட்டிங் ஆர்டரும் வலுவாக இருக்கும்.

Team India Playing XI Changes: இந்திய அணி பிளேயிங் லெவன் (கணிப்பு) 

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மான் கில், ரிஷப் பண்ட், நிதிஷ் குமார் ரெட்டி, ஜடேஜா, குல்தீப் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங்

மேலும் படிக்க | இந்திய அணியின் 3 பெரிய தவறுகள்... படுதோல்விக்கு காரணங்கள் என்னென்ன?

மேலும் படிக்க | பும்ராவுடன் சேர்ந்து 3 வீரர்கள் நீக்கம்! 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி!

மேலும் படிக்க | தோல்விக்கு யார் காரணம்? கவுதம் கம்பீர் கைகாட்டிய அந்த ஒரு வீரர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News