பும்ரா கிடையாது... நம்பர் 3இல் இந்த வீரர்... இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

ENG vs IND Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற கணிப்பை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 17, 2025, 05:48 PM IST
  • ஜஸ்பிரித் பும்ரா முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு குறைவு.
  • சாய் சுதர்சனுக்கு பிளேயிங் லெவனில் இடமிருக்கா...?
  • ஷர்துல் தாக்கூர் vs நிதிஷ் குமார் ரெட்டி - யாருக்கு வாய்ப்பு?
பும்ரா கிடையாது... நம்பர் 3இல் இந்த வீரர்... இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

ENG vs IND Headingley Test, Playing XI Prediction: இங்கிலாந்துக்கு இந்திய அணி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்து - இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. 

Add Zee News as a Preferred Source

ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை என இத்தொடருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு முதல் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்கள் பட்டோடி கோப்பை என்ற பெயரில் நடைபெற்று வந்தன. இத்தொடர் வரும் ஜூன் 20ஆம் தேதி தொடங்கிறது. ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெறும்.

ENG vs IND: இங்கிலாந்தை சமாளிக்குமா இந்தியா...?

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரின் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறுகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிசந்திரன் அஸ்வின், செதேஷ்வர் புஜாரா, அஜிங்கயா ரஹானே உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இன்றி இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. வலுவான இங்கிலாந்து அணியை, இளம் இந்திய அணி எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கேள்வியும் அதிகமாக உள்ளது. 

இந்நிலையில், கௌதம் கம்பீர் - சுப்மான் கில் கூட்டணி நிச்சயம் முதல் போட்டியில் இருந்தே இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்க நிச்சயம் திட்டமிடும். அப்படியிருக்க, இந்த கூட்டணி வலுவான பிளேயிங் லெவன் காம்பினேஷனையும் கண்டறிய வேண்டும். எந்தெந்த வீரர்கள் எந்தெந்த பேட்டிங் வரிசையில் விளையாட வருவார்கள், எத்தனை வேகப்பந்துவீச்சாளர், எத்தனை ஆல்-ரவுண்டர்கள் உள்ளிட்ட பல விஷயங்களை இறுதிசெய்ய வேண்டும்.

ENG vs IND: பும்ரா முதல் போட்டியில் வேண்டாம்...?! 

தற்போது பல முன்னணி வீரர்கள் தங்களின் கணிப்புகளை கூறத் தொடங்கிவிட்டனர். ஜஸ்பிரித் பும்ரா நிச்சயம் லார்ட்ஸ் மற்றும் எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் ஹெடிங்லியில் நடைபெறும் முதல் போட்டியில் கூட விளையாட வைக்க வேண்டாம் என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்திருந்தார். பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், ஹாக்கின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

ENG vs IND: சாய் சுதர்சனுக்கு இடமில்லையா...?

அதேபோல், இந்தியாவின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் நிச்சயம் பும்ராவை விளையாட வைப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும், நம்பர் 3 ஸ்பாட்டில் சாய் சுதர்சனுக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் சஞ்சய் பாங்கர் கூறி உள்ளார். அதே நேரத்தில், ஜடேஜாவுக்கு பதில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பிருப்பதாகவும் அவர் கணித்துள்ளார். ஷர்துல் தாக்கூருக்கு பதில் நிதிஷ் குமார் பிளேயிங் லெவனில் விளையாட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ENG vs IND: வேகப்பந்துவீச்சு முக்கியம் 

மறுபுறம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, இந்தியா பேட்டிங்கை வலுப்படுத்தவதற்காக அதிகம் ஆல்-ரவுண்டர்களை சார்ந்திருக்காமல், பலமான வேகப்பந்துவீச்சு படையை பிளேயிங் லெவனில் அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதுவே கடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை மூலம் கிடைத்த பாடம் என்றும் அவர் தெரிவித்தார். 

அதாவது "நிச்சயம் 3 பிரதான வேகப்பந்துவீச்சாளர்கள் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்கிறார் ஆகாஷ் சோப்ரா. ஷர்துலா அல்லது நிதிஷா என்றால் நம்பர் 4 வேகப்பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்கூர் இருப்பார், தேவைப்பட்டால் நிதிஷ்குமார் நம்பர் 5 பந்துவீச்சாளராக இருக்கலாம். நம்பர் 6 பௌலராக ஜடேஜாவை வைத்திருக்கலாம். இதனால், ஏராளமான பந்துவீச்ச ஆப்ஷனும் கிடைக்கும், பேட்டிங்கையும் நீங்கள் சமரசம் செய்ய வேண்டாம்" என்கிறார். 

இல்லையெனில், ஷர்துல் தாக்கூரை நீக்கவிட்டு கருண் நாயரை நம்பர் 6 இடத்திலும், ஜடேஜாவை நம்பர் 7 இடத்திலும் வைத்துக்கொண்டு நிதிஷ் + 3 பிரதான வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டு பந்துவீச்சு படையை அமைக்கலாம் என மாற்று வழியையும் விளக்கினார். இப்படி ஒவ்வொருவரின் கருத்துகளும் வெவ்வேறாக இருந்தாலும் இவற்றில் சில கருத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும். 

ENG vs IND: பும்ரா எந்தெந்த போட்டிகளில் விளையாடலாம்?

பும்ரா முதல் போட்டியில் விளையாடாமல் இருப்பது நல்லதே. ஜூன் 20 முதல் ஜூன் 24 வரை முதல் போட்டி நடைபெறுகிறது. அடுத்து 2வது போட்டி ஜூலை 2ஆம் தேதி தொடங்குகிறது. பும்ராவுக்கு இதனால் ஏறத்தாழ 15 நாள்கள் ஓய்வு கிடைக்கும். எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியிலும் (ஜூலை 2 - ஜூலை 6), லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியிலும் (ஜூலை 10 - 14) அடுத்தடுத்து விளையாடலாம். 

தொடர்ந்து மான்செஸ்டர் நகரில் நடைபெறும் 4வது டெஸ்டில் ஓய்வு எடுக்கலாம். 3வது போட்டிக்கு பின் சுமார் 15 நாள்கள் ஓய்வுக்கு பின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 5வது போட்டியில் (ஜூலை 31 - ஆகஸ்ட் 3) விளையாடலாம். இதனால் பும்ரா முக்கியமான போட்டிகளிலும் விளையாடலாம், அவரின் வேலைப்பளுவும் அதிகரிக்காமல் இருக்கும். 

ENG vs IND: அபிமன்யூ ஈஸ்வரனா...? சாய் சுதர்சனா...?

ஆனால் பேட்டிங்கை பொருத்தவரை ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் ஓபனிங் இறங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. அபிமன்யூ அல்லது சுதர்சன் இவரில் யாருக்கு 3வது இடம் என்பதும் பெரிய கேள்வி. ரஞ்சியில் அதிக ரன்களை அடித்த அபிமன்யூவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா அல்லது ஐபிஎல் தொடரில் மிளிர்ந்த சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால், சமீபத்திய பார்மை பார்க்கும்போது சாய் சுதர்சனே முன்னிலை பெறுகிறார். கில் நம்பர் 4 இடத்தில் இறங்கலாம்.

ENG vs IND: பிளேயிங் லெவனில் யார் யார்? 

துணை கேப்டன் ரிஷப் பண்ட், கருண் நாயர், ஜடேஜா ஆகியோரின் இடம் பிளேயிங் லெவனில் உறுதி. சூழல் மற்றும் ஆடுகளம் சார்ந்தே குல்தீபை பிளேயிங் லெவனில் விளையாட வைக்க முடியும். வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரில் ஷர்துல் தாக்கூருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வேகப்பந்துவீச்சில் இங்கிலாந்தில் அனுபவம் உள்ள சிராஜ், பிரசித் கிருஷ்ணா உடன் வருவார். பும்ரா இல்லாதபோது புதிய பந்தில் அர்ஷ்தீப் சிங் வீசலாம். இதில் நம்பர் 8 வரை பேட்டிங் இருக்கிறது. 5 பௌலிங் ஆப்ஷனும் இருக்கிறது. 

ENG vs IND: முதல் டெஸ்ட் பிளேயிங் லெவன் கணிப்பு

யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மான் கில், கருண் நாயர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ். 

மேலும் படிக்க | பயிற்சி ஆட்டத்தில் 2 முக்கிய வீரர்களுக்கு காயம்! மாற்று வீரர்கள் இவர்கள் தான்!

மேலும் படிக்க | இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் 2025: எங்கு, எப்போது, எதில் பார்க்கலாம்?

மேலும் படிக்க | கவுதம் கம்பீருக்கு பதில் விவிஎஸ் லட்சுமணன்? கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News