IND vs AUS: டிராவிஸ் ஹெட்டை தூக்க புதிய ஆயுதம்... இந்திய அணியின் மாஸ்டர் பிளான்

India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட்டை தூக்குவதற்கு, இந்திய அணி புதிய வீரரை களமிறக்கி உள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 14, 2024, 03:35 PM IST
  • இன்று 13.2 ஓவர்களே வீசப்பட்டன.
  • ஆஸ்திரேலியா 28 ரன்களையே எடுத்தது.
  • கவாஜா 19, மெக்ஸ்வீனி 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
IND vs AUS: டிராவிஸ் ஹெட்டை தூக்க புதிய ஆயுதம்... இந்திய அணியின் மாஸ்டர் பிளான் title=

India vs Australia, Gabba Test: பார்டர் - கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy) தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் குயீன்லாண்ட் மாகாணத்தின் தலைநகரான பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால் பலராலும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி மாறியது. 

இந்திய நேரப்படி இன்று 5.50 மணிக்கு போட்டி தொடங்கியது. முன்னதாக டாஸை வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, வானில் மேகக்கூட்டம் நிறைந்த சூழலை கருத்தில்கொண்டு பந்துவீச்சை தேர்வு செய்தார். பொதுவாக காபா ஆடுகளம் நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங்கிற்கு கைக்கொடுக்கும் என்பதை கருத்தில்கொண்டும் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம்.

இந்திய அணியில் ஜடேஜா, ஆகாஷ் தீப்

டாஸை வென்ற இந்திய அணி (Team India) அதன் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டது. ரவிசந்திரன் அஸ்வினுக்கு பதில் ரவிந்திர ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணாவுக்கு பதில் ஆகாஷ் தீப் ஆகியோரை கொண்டுவந்தது. ஆஸ்திரேலிய அணியில் (Team Australia) ஸ்காட் போலண்டுக்கு பதில் ஜோஷ் ஹசில்வுட் சேர்க்கப்பட்டுள்ளார். போட்டி தொடங்கி 6ஆவது ஓவரிலேயே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று நேரம் தள்ளிவைக்கப்பட்டது.

மேலும் படிக்க | இந்திய அணியை பொட்டலம் கட்ட ஆஸ்திரேலியா அணியின் மெகா பிளான்

நாளையும் மழையா...?

அதன்பின், சிறிது நேரத்தில் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. 13.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை எடுத்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதன்பின் மதிய உணவு இடைவேளை விடுக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்த காரணத்தாலும், மைதானத்தில் மழை நீர் தேங்கியதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் அத்தோடு நிறைவு செய்யப்பட்டது. கவாஜா 19, மெக்ஸ்வீனி 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்றைய ஆட்டத்தில் 76 ஓவர்கள் வீசப்படவில்லை எனலாம். நாளை மீண்டும் ஆட்டம் இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கும். வானிலை நிலவரப்படி நாளையும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. 

ஒருவேளை நாளை மீண்டும் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைப்பட்டால் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கியே செல்லும் எனலாம். ஆட்டம் டிராவானால் அடுத்தடுத்த போட்டிகளை இரு அணிகளும் நிச்சயம் வெல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதில் வெல்லும் அணியே ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

டிராவிஸ் ஹெட்டை தூக்க புதிய ஆயுதம்

அப்படியிருக்க இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருப்பது ஆஸ்திரேலிய பேட்டர் டிராவிஸ் ஹெட் (Travis Head) தான். கடந்த WTC இறுதிப்போட்டி 2023, ICC 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி 2023, அவ்வளவு ஏன் கடந்த அடிலெய்ட் பகலிரவு போட்டியிலும் கூட டிராவிஸ் ஹெட்தான் இந்திய அணிக்கு தலைவலியாக அமைந்தார். அவரது விக்கெட்டை கைப்பற்ற இந்திய அணி புதிய வீரரை பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவந்துள்ளது. 

ஷமியை போல் பந்து உள்ளே, வெளியே கொண்டுசெல்ல திறன் உடையவர், ஆகாஷ் தீப் (Aakash Deep). தொடர்ச்சியாக ஓவர்களை வீசி, அதுவும் ஸ்டம்ப் லைனில் தொடர்ந்து பந்துவீசக்கூடியவர். இதில் டிராவிஸ் ஹெட்டுக்கு நீங்கள் தொடர்ச்சியாக ஸ்டம்ப் லைனில் போட்டுவந்தால் நிச்சயம் அவர் தவறிழைப்பார். அதேபோல், நல்ல கழுத்தளவு பவுண்சர் போட்டலாம் அவர் தடுமாறுவார். எனவே, டிராவிஸ் ஹெட்டை அடிப்பதற்கே ஆகாஷ் தீப்பை இந்திய அணி களமிறக்கி உள்ளது.

மேலும் படிக்க | SMATல் கலக்கும் முன்னாள் சிஎஸ்கே வீரர்! வருத்தத்தில் சென்னை அணி! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News