Blessing Muzarabani KKR: ஐபிஎல் 2026 தொடர் (IPL 2026) வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்குகிறது. மே மாதம் இறுதிவரை ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இன்னும் இரண்டு வாரக்காலமே இருக்கும் சூழலில், உள்நாட்டு வீரர்கள் அனைவரும் தற்போது அவரவர் அணிகளுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் வெளிநாட்டு வீரர்கள் ஒரு சில நாள்களில் தங்களின் அணிகளுடன் இணைவார்கள்.
முஸ்தபிஷூர் ரஹ்மானுக்கு பதில்
இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஜம்பாப்வேவின் வேகப்பந்துவீச்சாளர் பிளஸ்ஸிங் முசர்பானியை தற்போது ஒப்பந்தம் செய்துள்ளது. வங்கதேச வீரர் முஸ்தபிஷூர் ரஹ்மானை தொடரில் இருந்து விலக்கியதால், அவருக்கு பதில் முஸ்தபிஷூர் ரஹ்மானை கேகேஆர் நியமித்துள்ளது. 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட இவர் 2017ஆம் ஆண்டில் இருந்து ஜிம்பாப்வே அணிககாக விளையாடி வருகிறார். 89 டி20ஐ போட்டிகளில் 106 விக்கெட்டை கைப்பற்றியிருக்கிறார். CPL, PSL, Vitality Blast, ILT20 உள்ளிட்ட லீக் தொடர்களிலும் இவர் விளையாடியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் முசர்பானி
தற்போது நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்காக பவர்பிளே ஓவர்களிலும், டெத் ஓவர்களிலும் சிறப்பாக பந்துவீசி 6 போட்டிகளில் 13 விக்கெட்டை கைப்பற்றினார். இந்தியாவிலும் இலங்கையிலும் இவர் விளையாடிய நிலையில், இந்தியாவில் 3 போட்டிகளில் 4 விக்கெட்டை அவர் கைப்பற்றியிருந்தார். முன்னதாக இவரை ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி பாகிஸ்தான் பிரீமியர் லீக் ஏலத்தில் கூட எந்த அணியும் எடுக்கவில்லை. ஆனால், மேற்கு இந்திய வீரர் ஷமார் ஜோசப்பிற்கு பதில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி இவரை ஒப்பந்தம் போட்டிருந்தது. கேகேஆர் அணி இப்போது இவரை ஒப்பந்தம் செய்திருப்பதன் மூலம், அவர் பாகிஸ்தான் பிரீமியர் லீக் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார். முசர்பாணி கடந்தாண்டு ஆர்சிபி அணியில் மாற்று வீரராக இருந்தார்.
ஹர்ஷித் ராணாவும் விலகல்
முசர்பானி வரும் மார்ச் 17ஆம் தேதி கேகேஆர் அணியுடன் கொல்கத்தாவில் இணைய உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழலில், ஹர்ஷித் ராணாவும் ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளார். மேலும், பதிரானாவும் முழு உடற்தகுதியை பெறவில்லை. இவரை கடந்த மினி ஏலத்தில் ரூ.18 கோடிக்கு எடுத்திருந்த கேகேஆர் அணி தற்போது திறமையான வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வலைவீசி வருகிறது.
பாஸ்ட் பௌலர்கள் தேவை
தற்போதைய சூழலில், உம்ரான் மாலிக், வைபவ் அரோரா, கார்த்திக் தியாகி, ஆகாஷ் தீப் உள்ளிட்ட இந்திய திறமைகள் அதிகம் இருக்கின்றனர். கேம்ரூன் கிரீன் பந்துவீசுவாரா என்பதும் கேள்விக்குறி. எனவே, வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை தேடும் பணியை கேகேஆர் அணி தொடர்ந்து மேற்கொள்ளும். அதிலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் அவர்களுக்கு தேவை.
பேட்டிங் ஓரளவு பலம்
கேகேஆர் அணிக்கு பந்துவீச்சில் சிறு பிரச்னை இருந்தாலும் பேட்டிங் பெரியளவில் பலமாக இருக்கிறது. பில் ஆலன், டிம் சீபர்ட் என அதிரடி ஓபனிங் ஜோடி கேகேஆர் அணிக்காக காத்திருக்கிறது. ரச்சின் ரவீந்திரா, ரோவ்மான் பாவெல், கேம்ரூன் கிரீன், அஜிங்கயா ரஹானே, ரிங்கு சிங் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் கைக்கொடுப்பார்கள். ரகுவன்ஷி, தேஜஸ்வி சிங், அன்குல் ராய், ரமன்தீப் சிங் உள்ளிட்டோரும் தங்களின் திறமையை நீருபிக்க காத்திருக்கிறார்கள். சுழற்பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன் போன்ற அனுபவ வீரர்களும் பலம் சேர்க்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் கேகேஆர் அணி சற்று பலம் குறைந்தே காணப்படுகிறது.
மேலும் படிக்க | ஏலத்தில் வாங்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்.. வரலாற்றை மாற்றிய காவ்யா மாறன்! முழு விவரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









