ஐபிஎல் மேட்ச் பிக்சிங் செய்ததாக மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு!
ஐபிஎல் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்ததாக சிபிஐ மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பிக்ஸிங் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் டெல்லியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த இருவர் என சந்தேகிக்கப்படும் மூன்று பந்தயக்காரர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நாடு தழுவிய விசாரணையை சிபிஐ தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | ராயுடு ஓய்வா... என்ன சொல்கிறது சென்னை அணி?
"கிரிக்கட் பந்தயத்தில் ஈடுபடும் தனிநபர்களின் வலையமைப்பு பாகிஸ்தானில் இருந்து பெறப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளின் முடிவுகளை பாதிக்கிறது" என்று சிபிஐக்கு தகவல் கிடைத்தது. டெல்லியில் உள்ள ரோகினியைச் சேர்ந்த திலீப் குமார் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ரம் வாசு மற்றும் குர்ரம் சதீஷ் ஆகியோரை குற்றம் சாட்டப்பட்டதாக நிறுவனம் தனது எஃப்ஐஆரில் பட்டியலிட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த நெட்வொர்க் பொதுமக்களை "பந்தயம் கட்ட தூண்டி" ஏமாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மோசடி செய்பவர்கள் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர் மற்றும் வங்கி அதிகாரிகளிடம் இருந்து வாடிக்கையாளர் ஆவணங்களை அறிந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்தனர். “இந்த வங்கிக் கணக்குகள் பிறந்த தேதிகள் உட்பட போலி விவரங்களைச் சமர்ப்பித்து, வங்கி அதிகாரிகளால் உரிய கவனம் செலுத்தாமல் திறக்கப்பட்டுள்ளன. "இதுபோன்ற பந்தய நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவில் உள்ள பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதி ஹவாலா பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள அவர்களது கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது" என்று எஃப்ஐஆர் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் படிக்க | சென்னை அணியில் இருந்து தோனி வெளியேறினால்....பாக்.வீரரின் ஆருடம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR