அடியோடு மாற்றப்படும் சேப்பாக் ஆடுகளம்.. சிஎஸ்கே தொடர் தோல்விக்கு பின் நடவடிக்கை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடுகளம் மற்றும் புள்தரைகள் முழுவதுமாக மாற்றப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

Written by - R Balaji | Last Updated : Jun 29, 2025, 06:50 PM IST
அடியோடு மாற்றப்படும் சேப்பாக் ஆடுகளம்.. சிஎஸ்கே தொடர் தோல்விக்கு பின் நடவடிக்கை!

இந்தியாவில் சென்னை சேப்பாக்கம் மைதானம் ஒரு முக்கியமானதாகும். இங்கு பல சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டும் வருகிறது. இந்த மைதானத்தைதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹோம் கிரன்வுடாக பயன்படுத்தி வருகிறது. பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கோட்டையாக திகழ்ந்த சென்னை சேப்பாக் மைதானம், நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் வரலாற்று சாதனைகள் பல தகர்க்கப்பட்டது. 

Add Zee News as a Preferred Source

குறிப்பாக பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக் மைதானத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல தோல்விகளை சந்தித்தது. இதனால் சிஎஸ்கே அணி தொடரைவிட்டு முதல் அணியாக வெளியேறியது. 14 போட்டிகளில் ஹோம் கிரவுண்டில் 7 போட்டிகள் நடைபெறும். ஆனால் ஹோம் கிரவுண்டிலும் தொடர் தோல்விகளை சந்தித்து. 

மைதானத்தின் ஆடுகளத்தை கணிக்க முடியவில்லை என்றும் பவுண்டரி லைனின் ஓரத்தில் இருக்கும் சேதம் அடைந்தது தான் காரணம் என்றும் வல்லுநர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், சென்னை எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் உள்ள ஆடுகளம் மற்றும் மைதானம் சுற்றி உள்ள புள்தரைகள் முழுவதும் மாற்றி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் செய்து வருகிறது. 

அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ளது.  அதற்கு முன்பாக சேப்பாக் மைதானம் சரி செய்யப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதம் பணிகள் அனைத்தும் முடிவடையும் என தெரிகிறது. மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானம் புனரமைக்கப்படுவதால், இந்திய மகளிர் மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகள் மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: பொதுவெளியில் புகைபிடிக்கும் விராட் கோலி? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

மேலும் படிங்க: "மீண்டும் என்னால் விளையாட முடியுமா?" விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட்.. மருத்துவர் ஓபன் டாக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News