CSK அணியின் 4 முக்கிய தேவைகள்... மினி ஏலத்தில் இந்த வீரர்கள் தான் டார்கெட்!

IPL 2026 Mini Auction: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரும் மினி ஏலத்தில் இருக்கும் முக்கிய தேவைகள் என்ன?, அந்த அணி குறிவைக்கும் வீரர்கள் யார் யார்? என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 16, 2025, 09:08 AM IST
  • சிஎஸ்கே மொத்தம் 12 வீரர்களை கழட்டிவிட்டுள்ளது.
  • சிஎஸ்கே ரூ.43.4 கோடியுடன் மினி ஏலத்திற்கு செல்கிறது.
  • மினி ஏலம் வரும் டிசம்பர் 16இல் நடைபெறுகிறது.
CSK அணியின் 4 முக்கிய தேவைகள்... மினி ஏலத்தில் இந்த வீரர்கள் தான் டார்கெட்!

IPL 2026 Mini Auction, Chennai Super Kings Plan: ஐபிஎல் 2026 சீசன் வரும் மார்ச் முதல் மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, மினி ஏலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வரும் டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு அனைத்து அணிகளும் தாங்கள் வைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை நேற்று (நவ. 15) அறிவித்தன.

Add Zee News as a Preferred Source

IPL 2026 Mini Auction: அதிக தொகையுடன் கேகேஆர் அணி

அதன்படி, அதிர்ச்சியளிக்கும் வகையில் பல்வேறு வீரர்கள் மினி ஏலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கேகேஆர் அணி அதிக பர்ஸ் தொகையுடன் மினி ஏலத்திற்கு செல்கிறது. வெங்கடேஷ் ஐயர் (ரூ.23.75 கோடி), ஆண்ட்ரே ரஸ்ஸல் (ரூ. 12 கோடி) உள்ளிட்ட அதிக மதிப்பிலான வீரர்களை விடுவித்து மொத்தம் ரூ.64.3 கோடியுடன் கேகேஆர் மினி ஏலத்திற்கு செல்கிறது.

IPL 2026 Mini Auction: அதிக வீரர்களை கழட்டிவிட்ட சிஎஸ்கே

தொடர்ந்து, மினி ஏலத்திற்கு அதிக தொகையுடன் செல்லும் 2வது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. அதிர்ச்சியளிக்கும் விதமாக கடந்த மெகா ஏலத்தில் ரூ.13 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட பதிரானாவையும் சிஎஸ்கே ஏலத்திற்கு விடுவித்துள்ளது. பதிரானா உள்பட ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே மற்றும் சாம் கர்ரன் என நான்கு வெளிநாட்டு வீரர்களையும் சிஎஸ்கே விடுவித்துள்ளது.

IPL 2026 Mini Auction CSK: சிஎஸ்கேவின் தேவைகளும்... வேண்டிய வீரர்களும்...

சிஎஸ்கே டிரேடிங் உள்பட மொத்தம் 12 வீரர்களை வெளியேற்றி ரூ.43.4 கோடியுடன் மினி ஏலத்திற்கு செல்கிறது. இன்னும் 9 வீரர்களை அவர்கள் எடுக்கலாம். அதில் 4 வெளிநாட்டு வீரர்களையும் எடுக்கலாம். வரும் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளான் என்ன?, எந்தெந்த வீரர்களை சிஎஸ்கே குறிவைக்கும்? என்பது பலரின் கேள்வியாக உள்ளது. அந்த வகையில், சிஎஸ்கேவின் நான்கு முக்கிய தேவைகள் மற்றும் அவர்கள் குறிவைக்கும் வீரர்கள் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

CSK: வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் மற்றும் பினிஷர்

சிஎஸ்கேவின் பிரதான பிரச்னைகளில் ஒன்று, பிளேயிங் லெவனில் சரியான பினிஷர் இல்லாததது. தோனியால் கடந்த சீசனில் பல போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்க முடியவில்லை. அவருக்கு இது கடைசி சீசனாக இருக்கும்பட்சத்திலும், ஓரளவு பினிஷிங் பங்களிப்பை கொடுத்த ஜடேஜாவை விடுவித்த பின்னரும், சிஎஸ்கேவுக்கு அந்த பினிஷர் தேவை இரட்டிப்பாகி உள்ளது.

இதனால், லியம் லிவிங்ஸ்டன், ஆன்ட்ரே ரஸ்ஸல், கேம்ரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், டேவிட் மில்லர் உள்ளிட்டோரை சிஎஸ்கே நிச்சயம் குறிவைக்கலாம். இதில் கேகேஆர் அணி ரஸ்ஸல் மற்றும் கிரீனை வலைத்துப்போட ஓரளவுக்கு கடும் போட்டியளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அப்படியிருக்கும் சூழலில், சுழற்பந்துவீச்சு படையை பலமாக்கும் விதத்தில் லிவிங்ஸ்டன் அல்லது மேக்ஸ்வெலுக்கு சிஎஸ்கே முழு மூச்சாக முயற்சிக்கலாம். கேம்ரூன் கிரீனை கேகேஆர் அதிக தொகை கொடுத்து முதலில் எடுத்துவிட்டால் சிஎஸ்கேவுக்கு ரஸ்ஸல் கிடைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

CSK: இந்திய ஆல்-ரவுண்டர்

இந்த பிரிவில் சிவம் தூபே, ராமகிருஷ்ண கோஷ் சிஎஸ்கேவில் இருந்தாலும், இன்னும் ஒரு சில இந்திய வீரர்களை சிஎஸ்கே நிச்சயம் எடுத்தாக வேண்டிய சூழல் உள்ளது. அதுவும் ஜடேஜா போன்ற ஒரு அனுபவமிக்க இந்திய ஆல்-ரவுண்டரை வெளியேற்றிவிட்டு, அவருக்கு மாற்றத்தை தேடுவது நிச்சயம் சாத்தியமே இல்லாத ஒன்று என்பதால், இளம் வீரரை நோக்கி தேடலில் சிஎஸ்கே வெற்றிக்கண்டால் நிச்சயம் நீண்ட காலநோக்கில் அணிக்கு இது ஆரோக்கியமான பலத்தை கொடுக்கும். 

உதாரணத்திற்கு, குஜராத் டைட்டன்ஸ் விடுவித்த மஹிபால் லோம்ரோரை எடுக்கலாம். இவர் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். இடது கை சுழற்பந்துவீச்சாளரும் கூட. இவரை சிஎஸ்கே அணி அதன் நம்பர் 6, நம்பர் 7 பேட்டராக களமிறக்கலாம். அதாவது தோனிக்கு முன் களமிறக்கலாம். அதேபோல், லக்னோ அணி விடுவித்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை முயற்சிக்கலாம். ஒருவேளை, சிவம் தூபே போல் அதிகம் பந்துவீசாத ஆல்-ரவுண்டர் தேவை என்றால் அபினவ் மனோகரை கூட சிஎஸ்கே முயற்சிக்கலாம். அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்திருக்கிறது.

CSK: வெளிநாட்டு ஓபனர்

சிஎஸ்கேவின் வெற்றிகரமான பார்முலாவில் ஒன்று, ஒபனிங்கில் ஒரு வெளிநாட்டவர் - ஒரு இந்தியர் என்ற காம்பினேஷன். சிஎஸ்கே கோப்பையை வென்ற 5 சீசன்களில் முறையே மேத்யூ ஹெய்டன் - முரளி விஜய் (2010), மைக்கெல் ஹசி - முரளி விஜய் (2011), ஷேன் வாட்சன் - பாப் டூ பிளெசிஸ் (2018), பாப் டூ பிளெசிஸ் - ருதுராஜ் கெய்க்வாட் (2021), டெவான் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் (2023) என்ற காம்பினேஷன்தான் ஓபனிங்கில் இருந்திருக்கிறது. அதாவது, 5இல் 4 முறை இந்த வெளிநாட்டவர் - இந்தியர் காம்பினேஷன் அவர்களுக்கு கைக்கொடுத்திருக்கிறது. 

ஆனால், வரும் 2026 சீசனில் புதிய காம்பினேஷனில் சிஎஸ்கே விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சஞ்சு சாம்சன் - ஆயுஷ் மாத்ரே ஆகியோர் ஓபனிங்கில் களமிறங்க உள்ளனர். ருதுராஜ் நம்பர் 3இல் விளையாட இருக்கிறார். டாப் ஆர்டரில் பிரெவிஸ் மட்டுமே வெளிநாட்டவராக தற்போது வரை இருக்கிறார். இதனால், ஓபனிங்கில் ஒரு மாற்று வீரராக, வெளிநாட்டவரை சிஎஸ்கே எடுக்க நினைக்கலாம்.

பாப் டூ பிளெசிஸை கூட குறைந்த தொகையில் சிஎஸ்கே எடுக்க முயற்சிக்கலாம். அடுத்து டிம் சைஃபர்ட், ஜானி பேர்ஸ்டோவ், டி காக் ஆகியோர் இருந்தாலும் அவர்கள் விக்கெட் கீப்பர்கள் என்பதால் சிஎஸ்கே சற்று தயக்கம் காட்டலாம். ஏனென்றால், தோனி, சஞ்சு சாம்சன், உர்வில் பட்டேல் என மூன்று விக்கெட் கீப்பர்கள் ஏற்கெனவே சிஎஸ்கேவில் இருக்கிறார்கள். பென் டக்கெட் விக்கெட் கீப்பர் என்றாலும் அவர் இங்கிலாந்து அணியில் தற்போது விக்கெட் கீப்பராக செயல்படுவதில்லை. அதனால் சிஎஸ்கே பென் டக்கெட்டையும் பேக்அப் ஓபனராக எடுக்கலாம். எதிர்கால திட்டமிடலாக ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கை குறைந்த தொகையில் சிஎஸ்கே எடுக்கலாம்.

CSK: வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள்

பதிரானாவை சிஎஸ்கே விடுவித்திருக்கிறது. வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளராக நாதன் எல்லிஸ் தற்போது சிஎஸ்கேவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறார், வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக ஓவர்டன் தக்கவைக்கப்பட்டிருக்கிறார். எனவே, ஓரிரு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சிஎஸ்கே நிச்சயம் முயற்சிக்கும். மீண்டும் பதிரானாவையே கூட குறைந்த தொகையில் எடுக்க முடியுமா என்றும் சிஎஸ்கே திட்டமிட்டிருக்கலாம். அதற்கும் வாய்ப்புள்ளது.

லக்னோ விடுவித்த ஷமார் ஜோசப், குஜராத் விடுவித்த ஜெரால்ட் கோட்ஸி, ஆர்சிபி விடுவித்த லுங்கி இங்கிடி, கேகேஆர் விடுவித்த நோர்க்கியா ஆகியோரை சிஎஸ்கே மினி ஏலத்தில் முயற்சிக்கலாம். இடதுகை வேகப்பந்துவீச்சாளராக கலீல் அகமது, குர்ஜப்னீத் சிங், முகேஷ் சௌத்ரி என மூன்று ஆப்ஷன்கள் இருப்பதால் வலது கை வேகப்பந்துவீச்சாளர்களை எடுக்கவே சிஎஸ்கே தீவிரம் காட்டலாம். 

மேலும் படிக்க | ஆன்ட்ரே ரசல் முதல் பத்திரனா வரை! ஒவ்வொரு அணியிலும் யார் யார் நீக்கம்? முழு விவரம் இதோ!

மேலும் படிக்க | சிஎஸ்கே கேப்டன்சியில் அதிரடி மாற்றம்! வெளியானது அறிவிப்பு!

மேலும் படிக்க | பதிரானாவை கழட்டிவிடும் CSK... ஏலத்தில் கேம்ரூன் கிரீனை தூக்க பெரிய பிளான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News