தோனி வந்தும் ஒண்ணும் மாறல... சிஎஸ்கே படுதோல்வி... படு குஷியில் கேகேஆர்!

IPL 2025, CSK vs KKR: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்தது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 11, 2025, 11:09 PM IST
  • சிஎஸ்கே ஐபிஎல் தொடரில் முதல்முறையாக தொடர்ச்சியாக 5 தோல்வி.
  • சிஎஸ்கே 9வது இடத்தில் நீடிக்கிறது.
  • சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவின் குறைந்த ஸ்கோர் இதுதான்.
தோனி வந்தும் ஒண்ணும் மாறல... சிஎஸ்கே படுதோல்வி... படு குஷியில் கேகேஆர்!

IPL 2025, CSK vs KKR: சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (ஏப். 11) நடைபெற்றது. டாஸ் வென்ற கேகேஆர் அணி கேப்டன் ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Add Zee News as a Preferred Source

CSK vs KKR: சிஎஸ்கேவின் மோசமான பேட்டிங்

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு மோசமான தொடக்கமே கிடைத்தது. ரச்சின் ரவீந்திரா - கான்வே ஆகியோர் தொடக்க கட்டத்தில் ரன் அடிக்க கடுமையாக திணறினர். கான்வே இரண்டு பவுண்டரிகளை அடித்தாலும் மொயின் அலி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, கடுமையான அழுத்தத்திற்கு ஆளான ரச்சன் ரவிந்திரா நான்கு ரன்களில் ஆட்டமிழந்தார். 

3வது பேட்டராக உள்ளே வந்த ராகுல் திரிபாதி பவுண்டரியே அடிக்காமல் திணற, விஜய் சங்கர் மட்டும் பவுண்டரிகளை அடிக்க முயற்சித்தார். அவர் கொடுத்த 2 எளிமையான வாய்ப்புகளை கேகேஆர் அணி தவறவிட்டது. ஆனாலும், விஜய் சங்கர் ரன் அடிக்க வேண்டும் என அழுத்தத்தில் இருந்தார். பவர்பிளேவில் வருண் சக்ரவர்த்தியை இறங்கி அடித்தாலும் கூட அவரால் பவர்பிளேவுக்கு பின் அந்தளவிற்கு விளையாட இயலவில்லை. அவரும் 29 ரன்களில் வருண் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார். அவர் 29 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸரை அடித்திருந்தார்.

CSK vs KKR:  104 ரன்களே இலக்கு

திரிபாதி 22 பந்துகளில் 1 பவுண்டரியை மட்டும் அடித்து 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அஸ்வின் 1, ஜடேஜா 0, இம்பாக்ட் வீரர் ஹூடா 0, தோனி 1, நூர் அகமது 1 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டுக்கு தூபே உடன் அன்ஷூல் கம்போஜ் ஓரளவு தாக்குபிடித்தார். தூபேவுக்கு கடைசி 2 ஓவர்களில்தான் அடிக்கவும் செய்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே 103 ரன்களையே அடித்தது. தூபே 29 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களை அடித்தார். சுனில் நரைன் 3, ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ் அரோரா மற்றும் மொயின் அலி தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

CSK vs KKR: சீறிப்பாய்ந்த கேகேஆர்

104 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கேகேஆர் சீறிப்பாய்ந்தது. சிஎஸ்கே அணி மொத்தமே 1 சிக்ஸரை அடித்த நிலையில், பவர்பிளேவிலேயே 4 சிக்ஸரை கேகேஆர் அணி அடித்தது. டி காக் 16 பந்துகளில் 3 சிக்ஸருடன் 23 ரன்களையும், சுனில் நரைன் 18 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரி உடன் 44 ரன்களையும் எடுத்தனர். அஜிங்கயா 20, ரின்கு சிங் 15 ரன்களை அடிக்க 10.1 ஓவரிலேயே கேகேஆர் அணி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 59 பந்துகளை மீதம் வைத்து வெற்றிபெற்றது. இந்த இன்னிங்ஸில் கேகேஆர் மட்டும் 10 சிக்ஸரை பறக்கவிட்டது கவனிக்கத்தக்கது. சுனில் நரைன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

CSK vs KKR: புள்ளிப்பட்டியல் அப்டேட்

புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு கேகேஆர் முன்னேறியது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடி கேகேஆர் 3இல் வெற்றி, 3இல்  தோல்வியடைந்துள்ளது. சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்துள்ளது, மேலும், முதல்முறையாக சேப்பாக்கத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்துள்ளது. 

சிஎஸ்கே 9வது இடத்தில் தத்தளிக்கிறது. 10வது இடத்தில் ஹைதராபாத் உள்ளது. குஜராத், டெல்லி அணிகள் முறையே முதலிரண்டு இடங்களில் உள்ளன. ஆர்சிபி, பஞ்சாப், லக்னோ, ராஜஸ்தான், மும்பை அணிகள் முறையே 4வது, 5வது, 6வது, 7வது, 8வது இடத்தில் உள்ளன. 

மேலும் படிக்க | பொட்டிப் பாம்பாக அடங்கிய சிஎஸ்கே... தோனி செய்த 3 பெரிய தவறுகள்!

மேலும் படிக்க | சிஎஸ்கேவில் பெரிய பிளேயிங் லெவன் மாற்றம்... தோனி டாஸில் பேசியது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News