சென்னை 'சுமார்' கிங்ஸ்... தோனியாலும் முடியவில்லை... சிஎஸ்கே படுதோல்வி என்ன காரணம்?

RR vs CSK: ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Written by - Sudharsan G | Last Updated : Mar 30, 2025, 11:59 PM IST
சென்னை 'சுமார்' கிங்ஸ்... தோனியாலும் முடியவில்லை... சிஎஸ்கே படுதோல்வி என்ன காரணம்?

IPL 2025, RR vs CSK: ஐபிஎல் 2025 தொடரின் 11வது லீக் போட்டி கவுகாத்தி பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் தேர்வு செய்தார்.

Add Zee News as a Preferred Source

RR vs CSK: பிளேயிங் லெவன் மாற்றம்

ராஜஸ்தான் அணி அதன் பிளேயிங் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. சிஎஸ்கே அணியில் தீபக் ஹூடா மற்றும் சாம் கரன் ஆகியோருக்கு பதில் விஜய் சங்கர் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் களமிறங்கினர். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி பவர்பிளேவில் மிரட்டலான தொடக்கத்தை அளித்தது.

RR vs CSK: அதிரடியாக தொடக்கம்  

இருப்பினும், ஜெய்ஸ்வால் 4 ரன்களில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின் வந்த நிதிஷ் ராணா அதிரடியாக விளையாட தொடங்கினார். கலீல் அகமது, அஸ்வின், ஜேமி ஓவர்டன் பந்துகளை சிதறடித்து 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். குறிப்பாக, பவர்பிளேவில் அஸ்வின் வீசிய 5வது ஓவரில் 2 சிக்ஸர், 1 பவுண்டரியை அடித்து மிரட்டியது குறிப்பிடத்தக்கது. இதனால் பவர்பிளே முடிவில் ராஜஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 79 ரன்களை அடித்திருந்தது. தொடர்ந்து, சாம்சன் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.

RR vs CSK: நிதிஷ் ராணா மிரட்டல்

ரியான் பராக் ஒருமுனையில் நிற்க நிதிஷ் ராணா அதிரடியை  தொடர்ந்தார். அவர் 36 பந்துகளில் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸர் உள்பட 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து துருவ் ஜூரேல் 3, ஹசரங்கா 4 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ரியான் பராக் 28 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் அடித்து 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

கடைசியில் ஹெட்மயர் 19 ரன்களை அடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 182 ரன்களை அடித்தது. கலீல் அகமது, நூர் அகமது, மதீஷா பதிரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டை அடித்தனர்.

RR vs CSK: 183 ரன்கள் இலக்கு

183 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கேவுக்கு முதல் ஓவரிலேயே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்ச்சர் வேகத்தில் டக்அவுட்டானார். பவர்பிளேவிலும் சிஎஸ்கே அணி 1 விக்கெட்டை இழந்து 42 ரன்களை எடுத்தது. இந்த போட்டியிலும் மிடில் ஆர்டர் மெதுவான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. திரிபாதி 23(19), தூபே 18(10), விஜய் சங்கர் 9(6) ரன்கள் என சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த மூன்று பேரையும் ஹசரங்கா அவரது அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்கச் செய்தார்.

RR vs CSK: தேஷ்பாண்டேவை கிழித்தெடுத்த தோனி, ஜடேஜா

ருதுராஜ் உடன் ஜடேஜா நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இந்த ஜோடி 37 ரன்களை அடித்தது. அரைசதம் கடந்த ருதுராஜ் ஹசரங்காவின் வீசிய 16வது ஓவரில் சிக்ஸர் அடித்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். உடனே தோனி களத்திற்குள் வந்து ஜடேஜா உடன் நிதானம் காட்ட தொடங்கினார். இதனால் கடைசி 2 ஓவர்களில் 39 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். முதல் பந்தில் பவுண்டரி, 4வது பந்தில் சிக்ஸர் அடித்து தோனி மிரட்ட, கடைசி பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்து ஆட்டத்தை பரபரப்பாக்கினார். இதனால் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது.

RR vs CSK: கடைசி ஓவர் திக் திக் திக்

கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீசினார். முதல் பந்து வைடாக வீசப்பட்டதும் மீண்டும் முதல் பந்தை வீசினார். அந்த பந்தில் தோனி மிட் ஆன் திசையில் தூக்கி அடிக்க, அதை ஹெட்மயர் அற்புதமாக கேட்ச் பிடித்து ஆட்டத்தைேயே மாற்றிவிட்டார் எனலாம். இதனால் கடைசி 5 பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்டது. நான்காவது பந்தில் ஓவர்டன் ஒரு சிக்ஸர் மட்டும் அடிக்க சிஎஸ்கே அணியால் அந்த ஓவரில் 13 ரன்களையே அடிக்க முடிந்தது. இதனால், சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களையே அடித்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ராஜஸ்தான் பந்துவீச்சில் ஹசரங்கா 4, ஆர்சர் மற்றும் சந்தீப் சர்மா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை நிதிஷ் ராணா வென்றார். புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே 7வது இடத்திலும், ராஜஸ்தான் 9வது இடத்திலும் தொடர்கின்றன.

RR vs CSK: சிஎஸ்கே தோல்விக்கு என்ன காரணம்?

சிஎஸ்கே அணி கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி ராஜஸ்தான் 182 ரன்களுக்கு கட்டுப்படுத்தினாலும் பவர்பிளேவில் மிக மோசமாக விளையாடியது. பவர்பிளேவில் ரச்சின் ரவீந்திரா முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தாலும், ராகுல் திரிபாதி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் சிறப்பாக விளையாடவில்லை. இதன் காரணமா முதல் 3 ஓவர்களில் சிஎஸ்கே 5 ரன்களையே அடித்திருந்தது. பவர்பிளே முடிவில் 42 ரன்களை அடித்திருந்தது. பவர்பிளேவில் சரியாக ரன்களை அடிக்காததுதான் சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆகும். எனவே, கான்வே அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஓபனிங்கில் வர வேண்டும். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News