)
Chennai Super Kings, Dewald Brevis IPL 2025 Signing: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2025 ஐபிஎல் சீசனில் காயமடைந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங்கிற்கு பதில் தென்னாப்பிரிக்கா பேட்டர் டெவால்ட் பிரெவிஸை மாற்று வீரராக எடுத்தது.
டெவால்ட் பிரெவிஸ் ஐபிஎல் மெகா ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. அவரது அடிப்படைத் தொகை ரூ.75 லட்சமாகவே இருந்தது. குர்ஜப்னீத் சிங்கை மெகா ஏலத்தில் சிஎஸ்கே ரூ.2.2 கோடிக்கு எடுத்திருந்தது. இதனால், டெவால்ட் பிரெவிஸை ரூ.75 லட்சத்திற்கு குறையாமலும், ரூ.2.2 கோடிக்கு மிகாமலும் சிஎஸ்கே எடுக்க வேண்டும் என்பதே விதி.
இந்நிலையில், டெவால்ட் பிரெவிஸை சில அணிகள் தொடரின் இடையே தொடர்புகொண்டதாகவும், சிஎஸ்கே அதிக பணம் கொடுக்க ஒப்புக்கொண்டதால் அவர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார் என்றும் சிஎஸ்கே வீரர் அஸ்வின் அவரது யூ-ட்யூப் பக்கத்தில் பேசியிருந்தார். அஸ்வினின் கருத்து சற்று பரபரப்பை உண்டாக்கியது. அதாவது, டெவால்ட் பிரெவிஸ் அடுத்த ஐபிஎல் மினி ஏலத்திற்கு போகாமல் அணியிலேயே தக்கவைக்கும் பொருட்டு சிஎஸ்கே விதியை மீறி அதிக தொகை கொடுத்ததா என கேள்வி எழுந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இந்தச் சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் குறித்து விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளது. ஐபிஎல் 2025 தொடரின் இடையே மாற்று வீரராக டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்யும் போது, அனைத்து நடவடிக்கைகளும் ஐபிஎல் விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்கியே சிஎஸ்கே அணி செயல்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐபிஎல் வீரர் விதிமுறைகள் 2025-27 படி, குறிப்பாக 'மாற்று வீரர்கள்' என்பதன் கீழ் பிரிவு 6.6 இன்படி டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும் சிஎஸ்கே விளக்கம் அளித்துள்ளது.
"விதி 6.1 அல்லது 6.2 பிரிவின்படி ஒப்பந்தம் செய்யப்படும் மாற்று வீரரை லீக் கட்டணத்தில் பணியமர்த்தலாம். இது காயமடைந்த/விளையாட முடியாத வீரருக்கு தொடர்புடைய சீசனுக்கு செலுத்த வேண்டிய லீக் கட்டணத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது. ஒரு சீசன் நடைபெற்று வரும் போது ஒரு மாற்று வீரர் சேர்க்கப்பட்டால், அவருக்கு செலுத்தப்படும் லீக் கட்டணம், அவர் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்பு அந்த சீசனில் போட்டிகளுக்கு ஏற்றவாறு குறையும். மேலும், அந்த வீரர் ஒப்பந்தத்தின் கீழ் வேறு ஏதேனும் தொடர்புடைய விலக்குகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டும் அவரின் சம்பளம் குறைக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
Chennai Super Kings: ஐபிஎல் தொடரில் டெவால்ட் பிரெவிஸ்
டெவால்ட் பிரெவிஸ் இந்த தொடரில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். இதனால் அவருக்கு 6 போட்டிகளை கணக்கில் வைத்து ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அவருக்கு குர்ஜப்னீத் சிங்கின் சம்பளத் தொகையான ரூ.2.2 கோடியே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. டெவால்ட் பிரெவிஸ் சிஎஸ்கே அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 255 ரன்களை அடித்துள்ளார். அதற்கு முன் 2022 முதல் 2024 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் இருந்தார். அப்போது மும்பை அணிக்காக 10 போட்டிகளில் விளையாடி 230 ரன்களை மட்டுமே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ், ஆஸ்திரேலியா உடனான 2வது டி20 போட்டியில் அதிரடியாக சதம் அடித்து பெரும் கவனத்தை ஈர்த்திருந்தார். இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியிலும் அவர் அரைசதம் அடித்திருக்கிறார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ