இனி மஞ்சள் ஜெர்ஸியில் சஞ்சு சாம்சன்? - இந்த ஸ்டார் வீரரை RR உடன் டிரேட் செய்யும் CSK?!

IPL CSK - RR Trading: சிஎஸ்கே - ராஜஸ்தான் அணிகள் இடையே பெரிய டிரேடிங் ஒன்று நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 20, 2025, 07:26 PM IST
  • சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் விடுவிக்க இருப்பதாக தகவல்.
  • சிஎஸ்கே இந்த டிரேடிங்கில் ஒரு ஸ்டார் வீரரை கொடுப்பதாக தகவல்.
  • இந்த டிரேடிங் தகவல் குறித்து இன்று பலத்த விவாதங்களை பார்க்க முடிந்தது.
இனி மஞ்சள் ஜெர்ஸியில் சஞ்சு சாம்சன்? - இந்த ஸ்டார் வீரரை RR உடன் டிரேட் செய்யும் CSK?!

IPL CSK - RR Trading: ஐபிஎல் பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறிய 5 அணிகள் தற்போது அடுத்த சீசனுக்கு தயாராகி வருகின்றன. அதிலும் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே (Chennai Super Kings) தற்போது அடுத்தாண்டிற்கான முதன்மையான பிளேயிங் லெவனை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரேவிஸ், உர்வில் பட்டேல் என சிஎஸ்கேவில் புது ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது.

CSK - RR Trading: மினி ஏலத்திற்கு முன் டிரேடிங்

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் முடிந்து அடுத்த சீசனுக்கான மினி ஏலம் (IPL 2026 Mini Auction) தொடங்குவதற்குள் சிஎஸ்கே - ராஜஸ்தான் அணிகள் இடையே பெரிய டிரேடிங் ஒன்று நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, 2024இல் எப்படி குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை மீண்டும் பெற்றதோ, அதேபோல் ராஜஸ்தானின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே டிரேடிங் மூலம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

CSK - RR Trading: சஞ்சு சாம்சன் - ராகுல் டிராவிட் பனிப்போர்

முன்னர், ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியில் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும், கேப்டன் சஞ்சு சாம்சனுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. ராஜஸ்தானின் தொடர் தோல்விகள், சஞ்சுவின் காயம் மற்றும் மோசமான பார்ம் இருவருக்குமான தூரத்தை அதிகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

CSK - RR Trading: சஞ்சுவின் சுமாரான கேப்டன்ஸி...

சஞ்சு சாம்சனிடம் 2021ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணி கேப்டன்ஸியை ஒப்படைத்தது. இதில் 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே பிளே ஆப் வரை ராஜஸ்தான் வந்தது. 2022இல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் தோற்றது. 2021, 2023, 2025 ஆகிய ஆண்டுகளில் ராஜஸ்தான் பிளே ஆப் வரவில்லை எனலாம். இந்தாண்டு பல போட்டிகள் ரியான் பராக் தலைமையில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

CSK - RR Trading: சிஎஸ்கேவுக்கு வரும் சஞ்சு சாம்சன்?

சஞ்சு சாம்சனிடம் (Sanju Samson) இருந்து போதிய பலன்கள் கிடைக்கவில்லை என்பதாலும், டிராவிட் உடனான மோதல் காரணமாகவும் ராஜஸ்தான் சஞ்சு சாம்சனை, சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் ஒருவருக்கு பதிலாக டிரேடிங் செய்துகொள்ள திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CSK - RR Trading: வைரலாகும் X பதிவு

X தளத்தில் @Crickfootboi11 என்ற பயனர் இன்று (மே 20) அதிகாலை 2.11 மணிக்கு போட்ட பதிவில், "அடுத்த சீசனில் தான் விளையாட உள்ள புதிய அணிக்கும் (சிஎஸ்கே), புதிய வழிகாட்டிக்கும் (தோனி) எதிராக இன்று கேப்டனாக ஒரு கடைசி போட்டி... கடந்த 2 சீசன்களில் 2 தோல்விகள் காரணமாக, அவர்கள் (சிஎஸ்கே) இறுதியாக அவரை (சஞ்சு சாம்சனை) எடுத்துள்ளனர். சிஎஸ்கேவுக்கு வரவேற்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

CSK - RR Trading: ருதுராஜ் அல்லது ஜடேஜா

சிஎஸ்கே சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தனது தோனியை (MS Dhoni) தவிர்த்து வேறு நட்சத்திர வீரர் ஒருவரை ராஜஸ்தானுக்கு தாரைவார்க்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியிருக்க, ராஜஸ்தானில் ரூ.18 கோடியை பெறும் சஞ்சுவுக்கு பதில், சிஎஸ்கே தனது ரூ.18 கோடி வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) அல்லது ஜடேஜா ஆகிய இருவரில் ஒருவரை டிரேடிங் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

CSK - RR Trading: ஹர்திக் பாண்டியா டிரேடிங்...

மேலும், @Crickfootboi11 என்ற X பயனர் பதிவிட்ட இந்த பதிவு குறித்து பேஸ்புக்கில் Haamid என்பவர் தனி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், "இந்த நபர்தான் ஹர்திக் பாண்டியா - மும்பை இந்தியன்ஸ் டிரேடிங் தகவலை முதலில் கசியவிட்டவர்" என குறிப்பிட்டுள்ளார். மேலும், 2023ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அவர் போட்ட பதிவு ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்களும் இணையத்தில் பரவி வருகிறது.

CSK - RR Trading: ஜடேஜா ராஜஸ்தான் செல்ல அதிக வாய்ப்பா?

மேலும், Haamid அவரது பதிவில்,"சாம்சன் - ஜடேஜா டிரேடிங் (Jadeja) என்றால் இரு அணிகளுக்கும் நன்மை இருக்கும். இருவரும் 18 கோடி ரூபாய் சம்பளத்தில் உள்ளனர். தோனி ஓய்வு பெற்றால் சிஎஸ்கேவுக்கு ஒரு விக்கெட் கீப்பர் தேவை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒரு அனுபவமிக்க ஆல்ரவுண்டர் தேவை. இரு அணிகளும் இதனால் பயனடைவார்கள்.

இத்தனை நாட்களாக, ராஜஸ்தான் அணியில் ரசிகர்கள் மற்றும் விளம்பர ஒப்பந்தங்களை ஈர்ப்பதற்கு ஒரே ஒரு இந்திய நட்சத்திரமாக சாம்சன் மட்டுமே இருந்தார். இப்போது அவர்களிடம் ஜெய்ஸ்வால், பராக் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி கூட வந்துவிட்டார்.... மேலும், ராஜஸ்தான் அணி நிர்வாகத்தில் பராக் குடும்ப செல்வாக்கு இருப்பதால், அணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்ற செய்தி உண்மையாக இருந்தால், சாம்சன் நிச்சயமாக வெளியே வருவார், பார்ப்போம்" என பதிவிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஏற்கெனவே, 2021ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ராபின் உத்தப்பா சிஎஸ்கே அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | சிஎஸ்கே கேப்டன் இனி ருதுராக் கிடையாது.. புதிய கேப்டனை நியமிக்க திட்டம்?

மேலும் படிக்க | "தோல்விக்கு காரணமே இவர்கள்தான்".. ஆர்ஆர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!

மேலும் படிக்க | CSK கழட்டிவிடும் இந்த 4 முக்கிய வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News