)
ஐபிஎல் 2026 தொடரில் ப்ளேஆஃப் சுற்றை நோக்கிய போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் 53வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் நாளை மோதவுள்ளன. மே 10ம் தேதி நாளை பிற்பகல் 3:30 மணிக்கு, சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக கருதப்படும். பகல்நேர ஆட்டம் என்பதால், வெயிலின் தாக்கத்தால் ஆடுகளம் சற்று வறண்டு காணப்படலாம். இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மேலும் கைகொடுக்கும். இருப்பினும் தற்போது சென்னையில் மழை பெய்து வருவதால் மைதானத்தில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்தில் பொறுமையாக ஆடினால் மட்டுமே கணிசமான ரன்களை சேர்க்க முடியும். ஆட்டத்தின் பிற்பகுதியில் பந்துவீச்சு சற்று சவாலாக இருக்கக்கூடும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்து, ஒரு நல்ல ஸ்கோரை நிர்ணயிப்பது சிறந்த உத்தியாக இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் போன்றவர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் பந்துவீச்சில், குறிப்பாக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். குறிப்பாக ஓவர்டன், நூர் போன்றவர்கள் நன்றாக பந்துவீசி வருகின்றனர். மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த சில போட்டிகளாக லக்னோ அணி சிறந்த ஃபார்முக்கு திரும்பி வருகிறது. பேட்டிங்கில் அதிரடி காட்டக்கூடிய வீரர்கள் லக்னோ அணியில் இருந்தாலும், சேப்பாக்கம் போன்ற சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது அவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் தொடரில் சந்தித்த முந்தைய ஐந்து ஆட்டங்களில், இரு அணிகளும் தலா இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவின்றி கைவிடப்பட்டது. எனவே, இரு அணிகளும் சரிசம பலத்துடன் மோதுவதால், இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு நல்ல விறுவிறுப்பை தரும் என்பதில் சந்தேகமில்லை
சென்னை அணி தனது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய சாதகமாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐந்து போட்டிகளில் சிஎஸ்கே மூன்று வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்த சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள், குறிப்பாக ஸ்பின்னர்கள், லக்னோ பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்னோ அணி பலம் வாய்ந்ததாக இருந்தாலும், இன்னும் சரியான வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் போராடி வருகிறார்கள். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் ஒரு சமநிலையான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், சிவம் துபே, டெவால்ட் பிரெவிஸ், ஆயுஷ் மத்ரே, சர்ஃப்ராஸ் கான், உர்வில் பட்டேல், கார்த்திக் சர்மா, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், மேத்யூ ஷார்ட், அமன் கான், நூர் அகமது, கலீல் அகமது, நாதன் எல்லிஸ், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சவுத்ரி, ஸ்ரேயாஸ் கோபால், குர்ஜப்னீத் சிங், பிரசாந்த் வீர், அகேல் ஹொசைன், ராகுல் சாஹர், மாட் ஹென்றி, சக்கரி பால்க்ஸ்.
ரிஷப் பண்ட் (கேப்டன்), நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, அப்துல் சமத், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஹிம்மத் சிங், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், ஷாபாஸ் அகமது, அர்ஷின் குல்கர்னி, ஜார்ஜ் லிண்டே, மயங்க் யாதவ், ஆவேஷ் கான், முகமது ஷமி, மொஹ்சின் கான், முகுல் சவுத்ரி, மணிமாறன் சித்தார்த், பிரின்ஸ் யாதவ், திகேஷ் சிங் ரதி.
| IPL Points Table - Position | Team Name |
| 1 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் |
| 2 | பஞ்சாப் கிங்ஸ் |
| 3 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு |
| 4 | ராஜஸ்தான் ராயல்ஸ் |
| 5 | குஜராத் டைட்டன்ஸ் |
| 6 | சென்னை சூப்பர் கிங்ஸ் |
| 7 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
| 8 | டெல்லி கேப்பிட்டல்ஸ் |
| 9 | மும்பை இந்தியன்ஸ் |
| 10 | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் |
1. ஐபிஎல் 2026-ல் சிஎஸ்கே மற்றும் எல்.எஸ்.ஜி அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி எப்போது, எங்கு நடைபெறுகிறது?
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதும் ஐபிஎல் 2026 தொடரின் 53-வது லீக் போட்டி மே 10, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதியம் 3:30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.
2. இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது லீக் போட்டி எப்போது நடைபெறும்?
இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த போட்டி மே 15, 2026 அன்று இரவு 7:30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் எகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.