CSK-வில் இருக்கும் 4 இந்திய ஓபனர்கள்... அப்போ ஓபனிங் ஜோடி யாரு?

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது 4 இந்திய ஓபனர்கள் இருக்கும் சூழலில், எந்த இரண்டு பேர் ஓபனிங்கில் களமிறங்க வாய்ப்புள்ளது என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 6, 2025, 12:32 AM IST
  • சிஎஸ்கே கையிருப்பில் ரூ.43.4 கோடி உள்ளது.
  • குறைந்தபட்சம் 2 வீரர்களை எடுக்க வேண்டும்.
  • அதிகபட்சம் 9 வீரர்களை எடுக்கலாம்.
CSK-வில் இருக்கும் 4 இந்திய ஓபனர்கள்... அப்போ ஓபனிங் ஜோடி யாரு?

Chennai Super Kings, IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக தொகையுடன் களமிறங்க உள்ளது. கடந்த 2023 சீசனில் கோப்பையை வென்ற சிஎஸ்கே, கடந்த இரண்டு ஆண்டுகளாக பிளே ஆப் சுற்றுக்கு கூட வராததால் இந்த மினி ஏலத்தை அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முனைப்பில் உள்ளது.

Add Zee News as a Preferred Source

Chennai Super Kings: சஞ்சு சாம்சனால் தீர்ந்த பிரச்னை 

சிஎஸ்கே அணி மொத்தம் 16 வீரர்களை தக்கவைத்திருக்கிறது. இன்னும் 4 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 9 வீரர்களை அதிகபட்சமாக எடுக்கலாம். சிஎஸ்கே கையிருப்பில் ரூ.43.4 கோடி இருக்கிறது. சிஎஸ்கே அணி ஜடேஜாவையும், சாம் கர்ரணையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கொடுத்து, அங்கிருந்து சஞ்சு சாம்சனை பெற்றுள்ளது. சஞ்சு சாம்சனால் சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் பிரச்னையே தீர்ந்துவிட்டது.

Chennai Super Kings: சிஎஸ்கே விடுவித்த வீரர்கள்

இதனால், சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி உள்ளிட்ட ஓபனர்களை கழட்டிவிட்டிருக்கிறது. மேலும், கடந்த சீசனில் பெரியளவில் சொதப்பிய ஆல்-ரவுண்டர்களான விஜய் சங்கர், தீபக் ஹூடா ஆகியோரை கழட்டிவிட்டிருக்கும் சிஎஸ்கே ஷேக் ரஷீத், ஆன்ட்ரே சித்தார்த், கமலேஷ் நாகர்கோட்டி, வன்ஷ் பேடி உள்ளிட்ட இந்திய வீரர்களையும் சிஎஸ்கே விடுத்துள்ளது.

Chennai Super Kings: மினி ஏலத்தில் கேகேஆர் vs சிஎஸ்கே 

ஆனால், மினி ஏலத்தில் கேம்ரூன் கிரீன் போன்ற பெரிய வீரர்கள் வருவார்கள் என்பதால் பர்ஸ் தொகை அதிகம் வேண்டும் என்பதால், யாருமே எதிர்பார்க்காத விதமாக மதீஷா பதிரானாவையும் சிஎஸ்கே கழட்டிவிட்டுள்ளது, ரூ.13 கோடிக்கு கடந்த மெகா ஏலத்தில் பதிரானாவை தக்கவைத்திருந்தது சிஎஸ்கே. இதனால்தான், சிஎஸ்கேவின் பர்ஸ் தொகை அதிகமானது. தற்போது கேகேஆர் அணிக்கு (ரூ.64.3 கோடி) அடுத்து அதிக பர்ஸ் தொகையை வைத்துள்ள அணி சிஎஸ்கேதான். இதன்மூலம், பல முன்னணி வீரர்களுக்கு கேகேஆர் vs சிஎஸ்கே மோதலை நம்மால் பார்க்க முடியும்.

Chennai Super Kings: சிஎஸ்கேவின் தேவை என்ன?

சிஎஸ்கேவுக்கு ஜடேஜா மற்றும் சாம் கர்ரணுக்கு மாற்று வீரர்களாக இந்திய ஆல்-ரவுண்டர்கள், வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்கள் தேவை உள்ளது. இந்திய ஆல்-ரவுண்டர்கள் மற்றும் பினிஷர்கள் பலர் ஏலத்தில் வர இருக்கிறார்கள். ஆனால், தரமான வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்கள் குறைவாகவே உள்ளனர். கேம்ரூன் கிரீன், லிவிங்ஸ்டன் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. நாதன் எல்லீஸிற்கு மாற்று வீரர் ஒருவரும் தேவை. இந்திய பேக்-அப் வேகப்பந்துவீச்சாளர், வெளிநாட்டு பேக்-அப் ஓபனரையும் சிஎஸ்கேவுக்கம் தேவையாகும்.

Chennai Super Kings: சிஎஸ்கேவின் 4 ஓபனர்கள்

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, சஞ்சு சாம்சன் - ஆயுஷ் மாத்ரே - உர்வில் பட்டேல் - ருதுராஜ் கெய்க்வாட் என நான்கு இந்திய ஓபனிங் வீரர்கள் சிஎஸ்கேவில் இருக்கிறார்கள். இதில் ருதுராஜ் கெய்க்வாட் 3வது வீரராகவே களமிறங்கி வருகிறார். ஆயுஷ் மாத்ரே, ருதுராஜ் இல்லாத நேரத்தில் நம்பர் 3 வீரராக களமிறங்கினார். சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் சரி, இந்திய அணியிலும் சரி அவரது ஓபனிங் ஸ்பாட்டை இழந்துவிட்டார்.

Chennai Super Kings: அப்போ யாரு ஓபனிங் ஜோடி?

ஆனால், இங்கு அவருக்கு ஓபனிங் ஸ்பாட் என்பது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது. ஆயுஷ் மாத்ரே ஓபனராக தன்னை நிலைநிறுத்தி உள்ளார். இதன்படி பார்த்தால் தற்போதைய சூழலில் சஞ்சு சாம்சன் - ஆயுஷ் மாத்ரே ஆகியோர்தான் ஓபனராக வர வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட் நல்ல காம்பினேஷன் என்றாலும் நம்பர் 3இல் திடமான வீரரும், கடைசி வரை நின்று விளையாடும் வீரர் வேண்டும் என்பதால் ருதுராஜ் அங்கு விளையாடுவதே சிறந்தது. ஒருவேளை இந்திய பினிஷர் கிடைக்காவிட்டால் உர்வில் பட்டேலை கூட பின்வரிசையில் விளையாட வைக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | CSK இந்த முக்கிய வீரரை கழட்டிவிட்டது பெரிய தவறு... 3 காரணங்கள் இதோ!

மேலும் படிக்க | கிரீன், லிவிங்ஸ்டன் மட்டுமல்ல.. இந்த வீரருக்கும் குறி வைக்கும் CSK!

மேலும் படிக்க | CSK உற்று நோக்கும் இந்த 20 வயது வீரர்... ஜடேஜாவுக்கு சரியான மாற்று கிடைச்சாச்சு...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News