தோனி பேட்டிங் இடத்தை மாற்றுமா CSK? கீழ் வரிசையில் இறங்குவது சரியில்லை!

Will Chennai Super Kings Change Dhoni Batting Order: 2026 ஐபிஎல் தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நோக்கி செதேஷ்வர் புஜாரா ஒரு முக்கிய கேள்வியை கேட்டுள்ளார்.   

Written by - R Balaji | Last Updated : Mar 13, 2026, 09:52 AM IST
  • ஐபிஎல் தொடர் மார்ச் 28 அன்று தொடங்குகிறது
  • இம்முறை சிஎஸ்கே அணிக்காக முன் வரிசையில் பேட்டிங் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது
  • முன்னாள் வீரர் செதேஷ்வர் புஜாரா சிஎஸ்கே அணியை நோக்கி கேள்வி எழுப்பி உள்ளார்
தோனி பேட்டிங் இடத்தை மாற்றுமா CSK? கீழ் வரிசையில் இறங்குவது சரியில்லை!

Chennai Super Kings Latest News: 2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. மார்ச் 11 அன்று இத்தொடரின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. இதற்காக சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி உள்ளிட்ட 10 அணிகளின் வீரர்களும் தங்களது முகாமில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நோக்கி முன்னாள் வீரர் செதேஷ்வர் புஜாரா முக்கிய கேள்விகளை எழுப்பி இருக்கிறார். 

Add Zee News as a Preferred Source

ஆட்டத்தின் போக்கை மாற்றும் தோனி 

ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாக்வே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் எம். எஸ். தோனி 8வது 9வது இடத்திலேயே பேட்டிங் செய்து வருகிறார். இதற்கு அவரது உடல் தகுதியே காரணம் என கூறப்பட்டது. கீழ் வரிசையில் களமிறங்கும் தோனியால், நிறைய பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை. அதிகபட்சமாக 7 முதல் 10 பந்துகளையே அவர் எதிர்கொண்டு விளையாடுகிறார். பொதுவாக தனது அதிரடியான பேட்டிங்கால், ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய தோனி, இப்படி கீழ் வரிசையில் இறங்குவது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக அமைகிறது. 

தோனி 8, 9வது இடத்தில் களமிறங்குவது சரியா? 

இந்த நிலையில்தான், முன்னாள் வீரர் செதேஷ்வர் புஜாரா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நோக்கி முக்கிய கேள்விகளை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக பேசிய புஜாரா, தோனி இப்படி 8வது 9வது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்வது எனக்கு சரியாகபடவில்லை. அவர் அந்த இடத்தில் இறங்கி விளையாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. தோனி மிகவும் திறமை ஆனவர். அவரால் ஆட்டத்தின் போட்டியையே மாற்ற முடியும். 

சிஎஸ்கே அணி ஒரு குடும்பம் போன்றது  

தோனி கீழ் வரிசையில் இறங்கி 7, 8 பந்துகளை எதிர்கொள்வதற்கு பதிலாக அவர் ஒரு 30 பந்துகள் எதிர்கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள் என கூறிய புஜாரா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த அணி வீரர்களுக்கு ஒரு குடும்பம் போன்றது. அங்கு வீரர்களின் பொறுப்புகளில் நல்ல தெளிவு இருக்கும் என பாராட்டி பேசினார். 

அனைத்து போட்டிகளிலும் தோனி விளையாடுவாரா? 

இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ராஜ்ஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வந்துள்ளதால், வரும் 2026 ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா? அப்படி விளையாடினால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுவாரா? இல்லை இம்பாக்ட் வீரராக விளையாடுவாரா போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தன. 

காசி விஸ்வநாதன் விளக்கம் 

ரசிகர்களின் இந்த சந்தேகத்திக்கு பதிலளிக்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்திருக்கிறார். அவர், வரும் 2026 ஐபிஎல் சீசனில் தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தோனி இம்பாக்ட் வீரராக விளையாடுவாரா? விக்கெட் கீப்பராக செயல்படுவாரா என்பதெல்லாம் பயிற்சியாளர்கள்தான் முடிவு செய்வார்கள் என கூறி இருக்கிறார்.  

சிஎஸ்கே போட்டிகள்

தற்போது அறிவித்துள்ள முதல் 20 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாட இருக்கிறது. 

1) மார்ச் 30 ஆம் தேதி திங்கட்கிழமை, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி கெளகாத்தியில் அன்று மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.

2) ஏப்ரல் 03 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னையில் அன்று மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

3) ஏப்ரல் 05 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி பெங்களூருவில் அன்று மாலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது. \

4) ஏப்ரல் 11 ஆம் தேதி சனிக்கிழமை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னையில் அன்று மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

2026 ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம். எஸ். தோனி, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், ஆயுஷ் மத்ரே, கார்த்திக் ஷர்மா, சர்ஃபராஸ் கான், உர்வில் பட்டேல், அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, நூர் அகமது, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், பிரசாந்த் வீர், மாட் கான், ஜாக் ஃபோஸ், மேக்த்யூ, ஜாக் ஃபோ சௌத்ரி, நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், குர்ஜப்னீத் சிங், அகேல் ஹொசைன், மாட் ஹென்றி, ராகுல் சாஹர்.

மேலும் படிக்க: ஐபிஎல் 2026: காவ்யா மாறனின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. பிளேயிங் 11ல் இடம் பெறும் 4 வெளிநாட்டு வீரர்கள்!

மேலும் படிக்க: ஏலத்தில் வாங்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்.. வரலாற்றை மாற்றிய காவ்யா மாறன்! முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

 

About the Author

Trending News