உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷியாவை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரோஷியா அரையிறுதிக்குள் நுழைந்தது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய நேரப்படி நேற்றிரவு 11.30 மணிக்கு நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷியா - குரோஷியா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணிவீரர்களும் திறம்பட கோல்களை அடித்தனர். ஆட்டத்தின் முதல் பாதியில் ரஷியா, குரோஷியா அணிகள் 1-1 என சமனிலை வகித்தன. ஆனால் , ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 


இதையடுத்து, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதை வைத்து குரோஷியா வீரர் டொமகோஜ் விஜே ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். முதலாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது. 


தொடர்ந்து, இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் நிமிடத்தில் ரஷியா அணியின் பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை வகித்தன. இறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் குரோஷியாவும் ரஷ்யாவும் வாய்ப்பை மாறி,மாறி பயன்படுத்தின. இறுதியில் குரோஷியா  4-3 என்ற கோல்கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தி, வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது.