CSK Latest Update In Tamil: சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது. ஆனாலும் புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் தான் உள்ளது. இந்நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த மூன்று விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்களும், கிரிக்கெட் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சிஎஸ்கே அணி 2010 ஆம் ஆண்டு கோப்பையை வென்றபோது, இதே மாதிரி தான் முதல் ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஆனாலும் அந்த தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதேபோல் தற்போது நடக்குமா? என்று ரசிகர்கள் எதிர் பார்க்கின்றனர்.
ராகுல் திருப்பாதி கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், தற்போது பேட்டிங்கே மறந்துவிட்டது போல் அவர் ஒவ்வொரு பந்தையும் எதிர் கொள்கிறார் என்ற விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
சிஎஸ்கே அணியில் எப்படி ஷேக் ரஷீத் அபாரமாக விளையாடினாரோ அதைவிட அதிரடியாக ஆடக்கூடிய வான்ஷ் பேடி என்ற ஒரு வீரர் இருக்கிறார். அவர் பிரீமியர் லீக் தொடரில் 200க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்திருக்கிறார்.
ராகுல் திருப்பாதியை நீக்கிவிட்டு வான்ஷ் பேடியை மூன்றாவது வீரராக சிஎஸ்கே அணி களமிறக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதே போன்று ஆயுஷ் மாத்ரே என்ற 17 வயது வீரரை சிஎஸ்கே அணி தற்போது தேர்வு செய்துள்ளது. இதனால் ஆயுஷ் மாத்ரேவுக்கு பிளேயிங் 11ல் இடம் தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
விஜய் சங்கர் நல்ல வீரராக இருந்தாலும் தற்போது மாறிவரும் டி20 கிரிக்கெட் போட்டிக்கு அவர் ஏற்ற வீரர் கிடையாது என்பது தான் ரசிகர்களின் வாதமாக இருக்கின்றது. பேட்டிங்கில் சிஎஸ்கே அணி இந்த மாற்றங்களை செய்தால் மட்டுமே தொடர் வெற்றிகளை பெற முடியும். இல்லையென்றால் இந்த வெற்றி ஏதோ அத்தி போத்தது போல் மாறிவிடும்.
பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் எஞ்சி இருக்கும் ஏழு போட்டிகளில் குறைந்தபட்சம் ஆறு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இது கொஞ்சம் கடினமான காரியம்தான் என்றாலும் கடந்த காலங்களை வைத்து பார்த்தால் கண்டிப்பாக இது சாத்தியம் தான்.
மேலும் படிக்க - IPL தொடரில் சூதாட்டமா? 'இவரிடம் ஜாக்கிரதை' - அணிகளுக்கு பிசிசிஐ கொடுத்த வார்னிங்
மேலும் படிக்க - தோனிதான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் - முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன்!
மேலும் படிக்க - CSK: மிரட்டிய ஷேக் ரஷீத்... ஆனால் அடுத்த போட்டியில் ஓபனிங்கில் வர மாட்டார் - ஏன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









