CSK பிளே ஆப் போக 'மேஜிக்' நடக்கணும்... அதற்கு இந்த 3 வீரர்கள் முக்கியம்

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இனி மேஜிக் நடக்க வேண்டும் என்றால் பிளேயிங் லெவன் காம்பினேஷனில் தோனி இந்த மாற்றத்தை செய்தாக வேண்டும்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 28, 2025, 01:27 PM IST
  • சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இந்த 3 வீரர்களை நீக்க வேண்டும்.
  • இந்த இளம் வீரரை இப்போதாவது சிஎஸ்கே எடுத்தாக வேண்டும்.
  • சிஎஸ்கேவுக்கு இனி 5 லீக் போட்டிகளே உள்ளன.
CSK பிளே ஆப் போக 'மேஜிக்' நடக்கணும்... அதற்கு இந்த 3 வீரர்கள் முக்கியம்

Chennai Super Kings: ஐபிஎல் 2025 தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது. குஜராத் அணி மட்டும் தற்போது 8 லீக் போட்டிகளை விளையாடி இருக்கிறது. மும்பை, பெங்களூரு, லக்னோ ஆகிய மூன்று அணிகள் தலா 10 போட்டிகளை விளையாடிவிட்டன. மற்ற 6 அணிகளும் தலா 9 போட்டிகளை விளையாடியிருக்கின்றன.

IPL 2025: பிளே ஆப் போகப்போவது யார் யார்?
 
இன்னும் 24 லீக் போட்டிகளே மீதம் இருக்கும் நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறப்போகும் நான்கு அணிகள் எவை என்பது இன்னும் உறுதியாகவில்லை. குஜராத்,டெல்லி, ஆர்சிபி, மும்பை, பஞ்சாப், லக்னோ ஆகிய 6 அணிகள் தான் தற்போதைக்கு பிளே ஆப் ரேஸில் முன்னணியில் இருக்கின்றன. 

நடப்பு சாம்பியன் கேகேஆர், கடந்த முறை 2வது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் வருவதற்கு அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும். ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே அணிகளுக்கு இது பொருந்தும் என்றாலும் இந்த அணிகள் அனைத்து போட்டிகளையும் வென்றாலும் ஒரு மேஜிக் நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும்.

Chennai Super Kings: மேஜிக்கல் வீரர்கள் வேண்டும்

இந்நிலையில், சிஎஸ்கேவை பொறுத்தவரை பலமான வீரர்களை வைத்திருந்தாலும் காம்பினேஷனில்தான் பெரிய சிக்கல் இருக்கிறது. தோனி அடுத்த 5 போட்டிகளையுமே வந்தால் மலை, போனால்... என்ற ரீதியில்தான் விளையாடப்போகிறார் என்பது உறுதி. அப்படியிருக்க, முன்னே சொன்னதுபோல் மேஜிக் நிகழவேண்டுமானால் காம்பினேஷனில் மேஜிக்கல் வீரர்களை எடுத்தாக வேண்டும். 

Chennai Super Kings: ஹூடா, பதிரானா வேண்டாம்

அந்த வகையில், ஏப். 30ஆம் தேதி சேப்பாக்கில் நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலேயே சிஎஸ்கேவின் பிளேயிங் லெவன் காம்பினேஷனில் இந்த சில மாற்றங்களை நீங்கள் காணலாம். அதாவது மிடில் ஓவர்களில் ரன்கள் வருவதில் சிரமம் இருப்பதை தோனியும், பிளமிங்கும் தொடர்ந்து பேசி வருகின்றனர். அந்த சூழலில், தீபக் ஹூடாவுக்கு (Deepak Hooda) பதில் வரும் போட்டியில் வன்ஷ் பேடி களமிறங்குவார் என 100% கூறலாம். அதேபோல், தனது ஆக்சன் மாற்றத்தால் சிரமப்பட்டு வரும் பதிரானாவுக்கு (Pathirana) பதில் நாதன் எல்லிஸை முயற்சித்து பார்க்கவும் வாய்ப்புள்ளது.

Chennai Super Kings: வன்ஷ் பேடி, எல்லிஸ் ஏன் வேண்டும்?

வலைப்பயிற்சியில் மிகுந்த நம்பிக்கை அளிக்கும் வீரராக வன்ஷ் பேடி (Vansh Bedi) திகழ்கிறார். ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரேவிஸ், அன்ஷூல் கம்போஜ் என சிஎஸ்கே களமிறக்கும் அத்தனை இளம் வீரர்களும் ஜொலிக்கும் நிலையில் வன்ஷ் பேடியும் அதேபோல் ஜொலிப்பார் என நம்பலாம். நாதன் எல்லிஸ் (Nathan Ellis) சர்வதேச போட்டிகளிலும் சரி, BBL தொடரிலும் சரி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்தார். முதல் போட்டிக்கு பின் பதிரானாவுக்காக அவரை சிஎஸ்கே ஓரங்கட்ட நேர்ந்தது. 

இந்நிலையில், சிஎஸ்கேவுக்கு மேஜிக் நிகழ வேண்டும் என்றால் ஹூடா, பதிரானாவை நீக்கிவிட்டு வன்ஷ் பேடி, எல்லிஸை பிளேயிங் லெவனில் வைக்க வேண்டும். அதேபோல், ஓவர்டனை (Jamie Overton) வைத்துக்கொண்டு சாம் கரனை (Sam Curran) நீக்கினால் போதும்.

Chennai Super Kings: சிஎஸ்கே பிளேயிங் லெவன் கணிப்பு

ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் தூபே, வன்ஷ் பேடி, ரவீந்திர ஜடேஜா, தோனி, ஓவர்டன், அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது. இம்பாக்ட் வீரர்: நாதன் எல்லிஸ். 

மேலும் படிக்க | ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக இந்த 5 வீரர்களை வெளியேற்றும் சிஎஸ்கே!

மேலும் படிக்க | தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் விளையாடுவாரா? சுரேஷ் ரெய்னா விளக்கம்

மேலும் படிக்க | மழையால் ரத்தான கேகேஆர் - பஞ்சாப் போட்டி! சென்னை அணிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News