CSKக்கு செம ஜாக்பாட்.. இந்த 4 வீரர்கள் வெறி ஆட்டம்! இவங்க இல்லாம பிளேயிங் 11 இல்ல

Chennai Super Kings Players Performance In T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை தொடர் நேற்றுடன் மார்ச் 08 முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், இம்மாதம் இறுதியில் சரியாக மார்ச் 28ஆம் தேதி 2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது.   

Written by - R Balaji | Last Updated : Mar 9, 2026, 05:16 PM IST
  • டி20 உலகக் கோப்பை 2026 தொடர் மார்ச் 08 முடிவடைந்துள்ளது
  • இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 28ஆம் தேதி தொடங்குகிறது
  • இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது
CSKக்கு செம ஜாக்பாட்.. இந்த 4 வீரர்கள் வெறி ஆட்டம்! இவங்க இல்லாம பிளேயிங் 11 இல்ல

Chennai Super Kings Players Best Performers In T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கிய நேற்றுடன் மார்ச் 08 முடிவடைந்தது. இத்தொடரில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி டி20 உலகக் கோப்பையை தக்கவைத்து கொண்டுள்ளது. குரூப் சுற்றில் தோல்வியை காணாமல் வந்த நிலையில், சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு பெரிய அடியை சந்தித்தது. அப்போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து தவறை சரி செய்து கொண்ட இந்திய அணி அதன்பின் சிறப்பாக விளையாடியது. அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. 

Add Zee News as a Preferred Source

இந்த சூழலில், நேற்று மார்ச் 08 நியூசிலாந்து அணிக்கு எதிராக இறுதி போட்டியில் விளையாடி, 2024 டி20 உலகக் கோப்பை வென்றதை இந்திய அணி தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்திய அணி இத்தொடரை வென்றதற்கு சஞ்சு சாம்சன், சிவம் துபே போன்ற சிஎஸ்கே வீரர்கள் மிக முக்கிய காரணம். இந்த நிலையில், 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் சிறப்பான பங்களிப்பை கொடுத்த சிஎஸ்கே வீரர்கள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

சஞ்சு சாம்சன் (இந்தியா) 

2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடினார். அவருக்கு முதலில் சில போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படாமல் இருந்தது. கிடைத்த முதல் இரண்டு வாய்ப்புகளில் சொர்ப்ப ரன்களில் அட்டமிழந்த சஞ்சு சாம்சன் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய வாழ்வா, சாவா போட்டி, அரையிறுதி போட்டி மற்றும் இறுதி போட்டி என தொடர்ந்து மூன்று முக்கிய போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் 97 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான இறுதி போட்டியில் தலா 89 ரன்கள் என இந்த டி20 உலகக் கோப்பையில் மொத்தமாக 321 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் பெற்றுள்ளார். ஐபிஎல்லுக்கு முன்பாக அவர் இப்படி ஒரு ஃபார்மில் இருப்பது சிஎஸ்கே அணிக்கு ஒரு பெரிய பலமாக அமைந்துள்ளது. 

சிவம் துபே (இந்தியா) 

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டராக இருந்து வருபவர் சிவம் துபே. இவர் 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவர் இந்த தொடரில் 9 போட்டிகளிலும் விளையாடினார். அதில் அவர் 235 ரன்கள் அடித்தார். குறிப்பாக நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 31 பந்துகளில் 66 ரன்கள் அடித்தார். மேலும், நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அவர் 8 பந்துகளில் 26 ரன்கள் குவித்து இந்திய அணி 250 ரன்களை கடக்க உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

டெவால்ட் ப்ரீவிஸ் (தென்னாப்பிரிக்கா) 

டெவால்ட் ப்ரீவிஸ் தென்னாப்பிரிக்கா அணிக்காக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக டி20 உலகக் கோப்பையில் களமிறங்கி விளையாடினார். அவர் இத்தொடரில் 9 போட்டிகளில் 207 ரன்கள் அடித்துள்ளார். இதில் ப்ரீவிஸ் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்றாலும், பெரும்பாலான போட்டிகளில் சிறப்பான பங்களிப்பையே கொடுத்துள்ளார். 9 போட்டிகளில் 8ல் களமிறங்கி விளையாடினார். ஒரே ஒரு முறை மட்டுமே ஒற்றை இலக்கு ரன்கள் அட்டமிழந்து வெளியேறி உள்ளார். அதாவது கனடாவுக்கு எதிரான உலகக் கோப்பையின் முதல் போட்டியில் மட்டும் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். எனவே, இவரது குறிப்பிடத்தக்க செயல்பாடு தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு பெரிய உதவியாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

மாட் ஹென்ரி (நியூசிலாந்து)

நியூசிலாந்து அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களாக விளையாடினார் மாட் ஹென்றி. இவர் நடந்து முடிந்த 2026 டி20 உலகக் கோப்பையில் குறிப்பிடத்தக்க செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். அவர் மொத்தமாக 10 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் நியூசிலாந்து அணிக்கு முக்கிய வீரராக இருந்து பந்து வீச்சை வழிநடத்தி உள்ளார். மேலும், இதே குறிப்பிடத்தக்க தாக்கத்தை வரும் ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணிக்காக கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மற்ற வீரர்கள் 

சஞ்சு சாம்சன், சிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்களான அகில் ஹொசைன், நூர் அகமது, ஜேமி ஓவர்டன், நாதல் எல்லீஸ் ஆகியோர் ஓரளவான செயல்பாட்டையே வெளிப்படுத்தி உள்ளனர். இவர்கள் நான்கு பேருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர். இவர்களின் இந்த செயல்பாடு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருந்தாலும், வரும் 2026 ஐபிஎல்லில் இவர்கள் நல்ல செயல்திறனை வெளிப்படுத்துவார்கள என எதிர்பார்க்கப்படுகிறது. 

CSK Latest News: சிஎஸ்கே அணி மீதான எதிர்பார்ப்பு 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2025 ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடியது. மொத்தம் விளையாடிய 14 லீக் போட்டிகளில் 10ல் தோல்வி அடைந்து தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. இந்த சூழலில், டிசம்பர் மாதம் நடந்த மினி ஏலத்தில் மொத்தமாக சிஎஸ்கே அணி தனது அணியை மாற்றி உள்ளது. சஞ்சு சாம்சன் போன்ற பெரிய வர்த்தகத்தை கையில் எடுத்தனர். இதன் காரணமாக வரும் 2026 ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்கு மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 2026 ஐபிஎல் இம்மாதம் இறுதியில் சரியாக மார்ச் 28ஆம் தேதி 2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

CSK Full Squad IPL 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம் 

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, எம்.எஸ். தோனி, சஞ்சு சாம்சன், டெவால்ட் ப்ரீவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ண கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஷ்ரேயாஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நாதன் எல்லிஸ், அகேல் ஹொசைன், பிரஷாந்த் வீர், கார்த்திக் சர்மா, மேத்யூ ஷார்ட், அமன் கான், சர்பராஸ் கான், மாட் ஹென்றி, ராகுல் சாஹர், சாக் ஃபௌல்க்ஸ்.

மேலும் படிக்க: இந்திய அணிக்கு அடிச்சது லக்... எகிறிய பரிசுத்தொகை... காரணம் டிரம்ப் - ஏன் தெரியுமா?

மேலும் படிக்க: இந்தியாவை பார்த்து வயித்தெரிச்சல் படும் பாகிஸ்தான்.. வெற்றிக்கு பின் கதறல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News