சிஎஸ்கே-வுக்கு 10வது இடம் உறுதி.. ராஜஸ்தான் ராயல்ஸ் ஈசி வின்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.  

Written by - R Balaji | Last Updated : May 20, 2025, 11:24 PM IST
  • ஐபிஎல்லின் 62வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது
  • அதில் சென்னை அணியை ராஜஸ்தான் அணி வென்றது
சிஎஸ்கே-வுக்கு 10வது இடம் உறுதி.. ராஜஸ்தான் ராயல்ஸ் ஈசி வின்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டம் இன்று (மே 20) டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதை வென்ற ராஜஸ்தான் ராயல் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து  வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். ஆனால் டெவான் கான்வே 10 ரன்களில் ஆட்டம் இழக்க, அவரை தொடர்ந்து வந்த உர்வில் பட்டேல் டக் அவுட் ஆனார். தொடர்ந்து அஸ்வின் 13, ரவீந்திர ஜடேஜா 1 ரன்கள் என அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர். ஆயுஷ் மாத்திரை, டிவால்ட் புரூவிஸ் மற்றும் சிவம் தூபே ஆகியோர் மட்டுமே ஒரளவுக்கு ரன்களை சேர்ந்தனர். 

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக யுத்விர் சிங் மற்றும் ஆகாஷ் மத்வால் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. 

அந்த அணியில் தொடக்க வீரர்கள், ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி சிற்ப்பாக விளையாடினர். ஜெய்ஸ்வால் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் சூர்யவன்ஷி அரைசதம் விளாசிய பின்னரே பெவிலியன் திரும்பினார். இதையடுத்து சஞ்சு சாம்சன் 41 ரன்கள் துருவ் ஜுரல் 31 ரன்களையும் அடித்தனர். இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 188 ரன்களை 17.1 ஓவர்களில் எட்டி வெர்றி பெற்றது. சென்னை அணி இந்த போட்டியை வென்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்காவது முன்னேறும் என எதிர்க்கப்பட்டது. ஆனால் தோல்வி அடைந்து இத்தொடரை 10வது இடத்திலேயே முடிக்க உள்ளது. .

மேலும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனை.. தவிர்ப்பாரா ரிஷப் பண்ட்!

மேலும் படிங்க: இனி மஞ்சள் ஜெர்ஸியில் சஞ்சு சாம்சன்? - இந்த ஸ்டார் வீரரை RR உடன் டிரேட் செய்யும் CSK?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News