Chennai Super Kings: ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி மற்றும் மே 21ஆம் தேதி என இரண்டு முறை மோத உள்ளன. இந்நிலையில், இந்த இரண்டு போட்டிகளுக்கான மைதானங்களும் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றத்திற்கான காரணங்களை விரிவாக காணலாம்.

IPL 2026, Chennai Super Kings Latest News: ஐபிஎல் 2026 சீசன் கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் விளையாடும் இந்த தொடரில் அனைத்து அணிகளும் தலா 4 போட்டிகளை விளையாடிவிட்டன.
20 லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலை பார்த்தோமானால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளிலும் வென்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 4இல் மூன்று போட்டிகளில் வென்று, ஒரு போட்டி மழையால் ரத்தானதால் 7 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளது. ஆர்சிபி அணி 4 போட்டிகளில் 3இல் வென்று 3வது இடத்திலும் உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் தலா 4 புள்ளிகளுடன், நெட் ரன்ரேட் அடிப்படையில் முறையே 4வது, 5வது, 6வது இடத்தில் உள்ளன.
அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 2 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் முறையே 7வது, 8வது, 9வது இடத்தில் உள்ளன. கேகேஆர் அணி மட்டும் 4 போட்டிகளில் மூன்றில் தோற்று, ஒரு போட்டி மழையால் ரத்தானதால் 1 புள்ளியுடன் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது.
இந்நிலையில், 21வது லீக் போட்டியில் 7வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - முதலிடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஹைதராபாத் நகரில் இன்று (ஏப். 13) மோதி வருகின்றன. தொடர்ந்து, நாளை (ஏப். 14) தமிழ் புத்தாண்டு தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் வேளையில், சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 9வது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - 10வது இடத்தில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் மூன்று போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்தாலும், கடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு முதல் வெற்றியை பெற்றது. எனவே, அதே வெறியுடன் அதே மைதானத்தில் 2வது வெற்றியை பெறுவதன் மூலம் தொடரில் சிறப்பான முன்னேற்றத்தை காண சிஎஸ்கே திட்டமிடும்.
இன்னும் 10 லீக் போட்டிகள் சிஎஸ்கே அணிக்கு இருப்பதால், அதில் நிச்சயம் 7-8 போட்டிகளை வென்றால்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியும். சிஎஸ்கே கடைசியாக 2023ஆம் ஆண்டில் 5வது கோப்பையை வென்ற பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது. 2024ஆம் ஆண்டில் 5வது இடத்திலும், 2025ஆம் ஆண்டில் 10வது இடத்திலும் சிஎஸ்கே நிறைவு செய்தது இங்கு கவனிக்கத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளின் அட்டவணையில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகி உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2 லீக் போட்டிகளின் மைதானங்களும் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
@gujarat_titans - @ChennaiIPL fixtures swapped for April 26 and May 21, owing to municipal corporation elections in Ahmedabad and other parts of Gujarat!
— IndianPremierLeague (@IPL) April 13, 2026
More Detai| #TATAIPL | #KhelBindaashttps://t.co/xDibwhhT8C
அதாவது, குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இந்த லீக் சுற்றில் 2 முறை மோத உள்ளன. அந்த வகையில், அதில் முதல் போட்டியாக குஜராத் - சென்னை அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி விளையாட திட்டமிடப்பட்டது.
ஆனால், தற்போது இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. அதே ஏப்ரல் 26ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு போட்டி நடைபெறும், ஆனால் அகமதாபாத்திற்கு பதில் சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் நகரிலும் குஜராத்தின் பிற பகுதிகளிலும் உள்ளாட்சித் தேர்தல்கள் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் காரணத்தால், அந்த போட்டி அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் மே 21ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் சென்னை - குஜராத் போட்டி, அதே நாளில் இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மே 18ஆம் தேதி நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டிதான் சென்னை சேப்பாக்கத்தில் இந்த சீசனில் நடைபெறும் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ