CSK vs MI: ஐபிஎல் 2025 தொடர் நேற்று கொல்கத்தாவில் தொடங்கியது. அதனை தொடர்ந்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனைவரும் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளுமே இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நோக்கில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐபிஎல் வரலாற்றில் இந்த இரண்டு அணிகளும் தலா ஐந்து முறை கோப்பையை வென்று பலமான அணி என்று நிரூபித்துள்ளனர். சென்னையில் இந்த போட்டி நடைபெறுவதால் சென்னை அணியின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க | தோனி எந்த இடத்தில் இறங்குவார்...? ருதுராஜ் கெய்க்வாட் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
நடந்து முடிந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட தனது பழைய அணியை மீண்டும் எடுத்துள்ளனர். மேலும் ஒரு சில இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த வருடம் ருதுராஜ் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப்க்கு செல்ல தவறியது. இதனால் இந்த முறை எப்படியாவது பிளே ஆப் செல்ல வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கும். கடந்த ஆண்டு ஸ்பின்னர்களை அதிகம் பயன்படுத்தாத சிஎஸ்கே இந்த முறை 4 ஸ்பின்னர்களை அணியில் வைத்துள்ளனர்.
சென்னை அணியின் பிளேயிங் லெவன்
டாப் ஆர்டரில் ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களமிறங்க உள்ளனர். ரச்சின் ரவீந்திரா சமீபத்திய சாம்பியன் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடியிருந்தார். அதன் பிறகு புதிதாக அணியில் இணைந்திருக்கும் ராகுல் திருப்பாதி களமிறங்குவார். அவரைத் தொடர்ந்து சிக்சர் மன்னன் சிவம் துபே களமிறங்க உள்ளார். ஆல் ரவுண்டராக விஜய் சங்கர் அல்லது சாம் காரின் ஆகிய இருவரில் ஒருவர் களமிறங்கலாம். அதன் பிறகு ரவீந்திர ஜடேஜா மற்றும் பினிஷர் ஆக தோனி களமிறங்க உள்ளனர்.
பவுலிங் ஆல் ரவுண்டராக ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளார். டாப் ஆர்டரில் விக்கெட்கள் சீக்கிரம் விழுந்தால் அஸ்வின் முன்பே களமிறங்க வாய்ப்புள்ளது. பந்துவீச்சாளர்களாக நூர் அகமது, கலில் அகமது இடம் பெறுவார்கள். இம்பாக்ட் பிளேயராக பத்திரனா இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. பத்திரானாவிற்கு காயம் ஏற்பட்டால் அவருக்கு பதில் நாதன் எல்லீஸ் இடம் பெறலாம்.
உத்ததேச பிளேயிங் 11: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, சாம் குர்ரன்/விஜய் ஷங்கர், ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, ஆர் அஷ்வின், கலீல் அகமது, மதீசா பத்திரனா, நூர் அகமது
மேலும் படிக்க | இந்த வீரரால் சிஎஸ்கேவுக்கு ஆபத்து... பிளே ஆப் போக இவர் விளையாடவே கூடாது...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ