)
Chennai Super Kings Latest News: ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த போட்டியில் பேட் கம்மின்ஸ் வழிநடத்தும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட இருக்கின்றது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில் SRH ஆட்டத்தில் அணியில் மாற்றம் செய்யக்கூடும். அப்படி சிஎஸ்கே பிளேயிங் 11ல் செய்யப்படும் மாற்றம் என்ன? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 12 போட்டிகள் விளையாடி 6ல் மட்டுமே வெற்றி பேற்றுள்ளது. இதனால் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல வேண்டும் என்றால், அடுத்த இரண்டு போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது. அதேசமயம் நல்ல நெட் ரன் ரேட்டுடன் வெற்றி பெறுவது அவசியம் ஆகும்.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மே 18 அன்று திங்கட்கிழமை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. லக்னோ அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 7 விக்கெட்கள் சென்னை தோல்வியடைந்ததை அடுத்து தனது தவறுகளை சரிசெய்துக்கொள்ள நினைக்கும். இதன் காரணமாக பிளேயிங் 11ல் மாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே இத்தகைய தவறுகளை சிஎஸ்கே அணி நிர்வாகம் சரிசெய்ய நினைக்கும். அதனால் அடுத்த போட்டியில் பிளேயிங் 11ல் நிச்சயம் இரண்டு மாற்றங்கள் இருக்கக்கூடும் என தெரிகிறது. அதாவது, அகீல் ஹெசைனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இம்பேக்ட் வீரராக களமிறக்க வாய்ப்புள்ளது. அதேபோல் பிரசாந்த் வீருக்கு பதிலாக சர்பராஸ் கானை கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
சர்பராஸ் கான் கடந்த இரண்டு மூன்று போட்டிகளாக விளையாடாமல் இருந்து வருகிறார். தொடரின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய அவர், அதன்பின் சற்று தடுமாறினார். இதன் காரணமாக அவரது இடத்தில் உர்வில் படேலை களமிறக்கி வருகின்றனர். இந்த நிலையில், SRH அணிக்கு எதிரான போட்டியில் சர்பராஸுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
LSG அணிக்கு எதிரான போட்டிக்கு சிஎஸ்கே அணியுடன் அவர் லக்னோ பயணிக்க மறுத்துவிட்டார். அவருக்கு காலில் வலி இருப்பதால், தொடர்ந்து விளையாடாமல் இருந்து வருகிறார். இந்த சூழலில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டி சேப்பாக்கில் நடைபெறுகிறது. இதுவே இத்தொடரில் சென்னையில் நடக்கும் கடைசி ஐபிஎல் போட்டி. தோனி 2026 ஐபிஎல்லுடன் ஓய்வு பெறுவதாக கூறப்பட்டு வருகிறது. இது உண்மையாக இருந்தால், சென்னையில் தனது கடைசி போட்டியை விளையாட நினைக்கலாம். தோனி வந்தால், பிரசாந்த் வீரர் இடத்தில் களமிறங்குவார். அப்படி இருக்கையில் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பிளேயிங் 11: சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் படேல், கார்த்திக் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், சிவம் துபே, சர்பராஸ் கான் அல்லது எம்.எஸ். தோனி, அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், முகேஷ் சவுத்ரி. இம்பேக்ட் வீரர்: அகீல் ஹொசைன்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் 11: அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசென், சலில் அரோரா, நிதிஷ் குமார் ரெட்டி, ஸ்மரன் ரவிச்சந்திரன், பாட் கம்மின்ஸ் (சி), சிவங் குமார், எஷான் மலிங்கா, சாகிப் உசேன், பிரஃபுல் ஹிங்கே. இம்பேக்ட் வீரர்: டிராவிஸ் ஹெட்.