கடந்த சில ஆண்டுகளாக செஸ்ஸில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் இந்திய செஸ் வீரர் குகேஷ். இவர் நேற்று (ஜூன் 01) நார்வேவில் நடைபெற்ற செஸ் போட்டியில் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் குகேஷ் உலக செஸ் தரவரிசையில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
முதல் இடத்தில் குகேஷால் தோற்கடிக்கப்பட்ட மேக்னஸ் கார்ல்சனும் இரண்டாவது இடத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஃபேபியானோ கருவானாவும் உள்ளனர். நார்வேவுக்கே சென்று உலக செஸ் தரவரிசையில் இருக்கும் நார்வேவை சேர்ந்த கார்ல்சனையே தோற்கடித்து இருக்கிறார் குகேஷ். தோல்வியால் கடுப்பான மேக்னஸ் கார்ல்சன் மேஜையை ஓங்கி அடித்து தனது கோப்பை வெளிப்படுத்தினர்.
மறுபுறம் வெற்றியால் திகைத்துப்போன குகேஷ் ஆனந்த கண்ணீர் விட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குகேஷின் இந்த வெற்றி அவரது செஸ் கரியரில் ஒரு முக்கியமான வெற்றியாக கருதப்படுகிறது. இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னர் செஸ் வீரர் குகேஷ் சில வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.
100 முறை விளையாடினால் 99 முறை நான் தோற்றிருப்பேன். எனக்கு இந்த நாள் ஒரு அதிர்ஷ்டமான நாளாகும். நான் அவருக்கு எதிராக தந்திரமான நகர்வுகளை நகர்த்த முயற்சித்தேன். கார்ல்சன் நேரம் இல்லாத நெருக்கடியில் சிக்கினார். இந்த தொடரில் இருந்து நான் கற்றுக்கொண்டது என்னவென்றால், நேரம் இல்லாத நெருக்கடிகள் மிகவும் கட்டுக்கடாமல் போகலாம் என்பது தான் என கூறினார்.
நார்வே செஸ் தொடரின் 6வது சுற்றில் கார்ல்சனை குகேஷ் தோற்கடித்தார். கார்ல்சன் இந்த போட்டியின் பெரும்பாலான நேரம் கையை மேலோங்க வைத்திருந்தார். ஆனால் குகேஷ் மிகவும் கவனத்துடன் விளையாடியதால், ஒரு கட்டத்தில் கார்ல்சன் நேரம் இல்லாத நெருக்கடியில் சிக்கினார். குகேஷ் துல்லியமான எதிர் தாக்குதலுடன் ஆட்டத்தை மாற்றி வெற்றியை தன்வசம் ஆக்கினார்.
மேலும் படிங்க: Glenn Maxwell odi records: மேக்ஸ்வெல்லின் ஓடிஐ சாதனைகள் என்னென்ன? முழு லிஸ்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









