தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்னாப்பிரிக்கா அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டெய்ன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 15 ஆண்டு காள டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் ஸ்டெய்ன் 439 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 


அது மட்டுமல்லாமல், டெஸ்ட் வரலாற்றில் எட்டாவது அதிக விக்கெட் எடுத்த வீரர் என்னும் பெருமையினையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் (575), க்ளென் மெக்ராத் (563), கோர்ட்னி வால்ஷ் (519) மற்றும் ஸ்டூவர்ட் பிராட் (450) ஆகியோருக்குப் பிறகு அதிக விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.


டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் டேல் ஸ்டெய்ன் தொடர்ந்து விளையாடுவார் என தெரிகிறது.


இந்நிலையில் தற்போது ஓய்வு பெற்ற ஸ்டெய்ன் தனது ஓய்வு குறித்து தெரிவிக்கையில்., இன்று நான் அதிகம் விரும்பக்கூடிய ஒரு வடிவத்திலிருந்து நிரந்தரமாக விலகும் முடிவை எடுத்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்தான் சிறந்தது, ஏனெனில் அது உங்கள் மனம், உடல் அளவில் மட்டுமல்லாது உணர்வு ரீதியாகவும் சவாலளிக்கக் கூடியது. இன்னொரு டெஸ்ட் போட்டியில் நான் ஆடப்போவதில்லை என்ற முடிவு பயங்கரமானதுதான். ஆனால் இதை விடவும் அச்சுறுத்துவது ‘இனி விளையாடவே முடியாது’ என்பதுதான். ஆகவே டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறுவது அவசியம் என்ற முடிவுக்கு வந்துள்ளேன். ஆகவே டி20, ஒருநாள் தொடர்களில் ஆடி என் ஆரோக்கியத்தை பராமரித்து இந்த வடிவங்களில் முழு ஆற்றலுடன் ஆட முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.


டேல் ஸ்டெய்ன் இங்கிலாந்துக்கு எதிராக 2004-ல் டெஸ்ட்டில் அறிமுகமானார். 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை அவர் 22.95 என்ற சராசரியில் கைப்பற்றியுள்ளார். 26 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் சாதனையை 5 முறையும் ஸ்டெய்ன் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.