DC vs LSG: ரிஷப் பண்ட் செய்த 4 தவறுகள்! லக்னோ தோற்க இது தான் காரணம்!

DC vs LSG: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Mar 25, 2025, 06:47 AM IST
  • பரபரப்பான போட்டியில் டெல்லி வெற்றி.
  • கடைசி ஓவரில் சிறப்பாக வெற்றி பெற்றுள்ளனர்.
  • 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.
DC vs LSG: ரிஷப் பண்ட் செய்த 4 தவறுகள்! லக்னோ தோற்க இது தான் காரணம்!

ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, நேற்றைய போட்டியிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அசுதோஷ் சர்மா மற்றும் விப்ராஜ் நிகம் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்துள்ளனர்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை.. குவியும் வாழ்த்துக்கள்

பவுலிங் தேர்வு செய்த டெல்லி

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால் அது அவர்களுக்கு பாதகமாக அமைந்தது. காரணம் லக்னோ அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடினர். யார் பவுலிங் செய்தாலும் அவர்களின் பந்து சிக்ஸர்களை நோக்கி மட்டுமே பறந்து கொண்டிருந்தது. மிச்சல் மார்ஸ் 72 ரன்களும், பூரன் 75 ரன்களும் அடித்து அசத்தியிருந்தனர். ஆனால் அதன் பிறகு வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் 300 ரன்கள் வந்து விடுமோ என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்தது.

சிறிது கடினமான இலக்கை எதிர்த்து களம் இறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பவர் பிளே முடிவதற்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறினர். முதல் ஓவரிலேயே ஷார்துல் தாகூர் 2 விக்கெடுகளை எடுத்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். 5 ஓவர்களுக்கு 70 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்று இருந்த நிலையில் டெல்லி அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
34 ரன்களும், விப்ராஜ் நிகம் 39 ரன்களும் அடித்தனர். கடைசி வரை போராடிய அசுதோஷ் சர்மா தனி ஒரு ஆளாக சாதித்து காட்டினார். 31 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் உட்பட 66 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றுள்ளார்.

ரிஷப் பந்த் செய்த தவறுகள்

எளிதாக வெற்றி பெற வேண்டிய ஒரு போட்டியை லக்னோ அணி கோட்டை விட்டுள்ளது. இதற்கு கேப்டன்சியும் ஒரு முக்கியமான காரணம். முக்கியமான கட்டத்தில் பவுலர்களை சரியாகப் பயன்படுத்தாதது லக்னோ அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. 17 வது ஓவரை திக்வேஷ் ரதி சிறப்பாக பந்து வீசி 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். 3 ஓவரில் 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷார்துல் தாக்கூருக்கு ஓவர் கொடுக்காமல், ரவி பிஷ்னோய் கொடுத்தார். ஆனால் அந்த ஓவரில் 17 ரன்கள் போனது. 2 ஓவர்களுக்கு 22 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் பிரின்ஸ் யாதவிற்க்கு பவுலிங் கொடுத்தார். ஆனால் அந்த ஓவரில் 16 ரன்கள் போனது. கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு திறமையான பவுலருக்கு கொடுக்காமல் சபாஷ் அகமதிற்கு கொடுத்தார். இதனால் டெல்லி அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது. மேலும் லக்னோ அணியின் பீல்டிங்கும் இந்த தோல்விக்கு ஒரு முக்கிய காரணம்.

மேலும் படிக்க | சிஎஸ்கே ஏமாற்றி வென்றதா? சர்ச்சையில் சிக்கிய ருதுராஜ், கலில்.. பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News