தோனிதான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் - முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 14) சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 

Written by - R Balaji | Last Updated : Apr 15, 2025, 08:46 PM IST
  • நடப்பாண்டு ஐபிஎல்லில் சென்னை அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது
  • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அவர் ரன் அவுட் செய்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்
தோனிதான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் - முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன்!

18வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாக விளையாடி வந்தது. ருதுராஜ் தலைமையில் விளையாடி வந்த சென்னை அணி கடந்த இரு போட்டிகளில் தோனி தலைமையில் விளையாடி வருகிறது. ருதுராஜ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில், தோனி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமையில் சென்னை அணி நேற்று தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. 

Add Zee News as a Preferred Source

இறுதி கட்டத்தில் தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அதேபோல் லக்னோ அணியின் பேட்டிங்கின் போது அப்துல் சமாத்தை ரன் அவுட் செய்தார் தோனி. அவர் ரன் அவுட் செய்த விதத்தை குறித்து அனைவரும் அவரை பெருமையாக பேசி வருகின்றனர். இந்த நிலையில், தோனி தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பேசி உள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசுகையில், தோனியின் விக்கெட் கீப்பிங்கில் எனக்கு எந்த விதமான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்பும் இதை சொல்லி இருக்கிறேன். மறுபடியும் சொல்கிறேன். தோனி தான் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர். அவர் நீண்ட காலமாக விக்கெட் கீப்பிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மிகவும் அற்புதமானவர். இன்று அவரது கேப்டன்சி மிகவும் துல்லியமாக இருந்தது. மிடில் ஓவர்களில் இரண்டு ஸ்பின்னர்களையும் பயன்படுத்திய விதம், எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது என அவரது கேப்டன்சி சரியாக இருந்தது. 

தோனி சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாற்றங்களை செய்தார். அவர் சுழற்பந்து வீச்சாளர்களை தொடர்ந்து பந்து வீச செய்தார். அவர்கள் போட்டியின் வேகத்தை மாற்றினார்கள். ஆடுகளத்தை தங்களுக்கு எற்றவாறு பயன்படுத்திக் கொண்டார்கள். விக்கெட்களையும் எடுத்தார்கள் எனத் தெரிவித்தார்.  

மேலும் படிங்க: CSK: மிரட்டிய ஷேக் ரஷீத்... ஆனால் அடுத்த போட்டியில் ஓபனிங்கில் வர மாட்டார் - ஏன்?

மேலும் படிங்க: ஐபிஎல்லில் MOM விருதை பெற்ற 7 வயதான வீரர்கள்.. டிராவிட்டுடன் இணைந்த தோனி.. முழு பட்டியல் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News