நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடுமையாக சொதப்பி உள்ளது. 13 போட்டிகளில் வெறும் 3ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இத்தொடரில் பிளே ஆஃப் சுற்றை முதலில் இழந்த அணியும் சென்னை தான். ஐபிஎல் தொடரில் சென்னை அணி தொடர்ந்து இரண்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவது இதுவே முதல் முறையும் ஆகும்.
அதேபோல், புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் நிறைவு செய்வதும் இதுவே முதல் முறை ஆகும். நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் தான் சென்னை அணிக்கு 10வது இடம் உறுதியானது. இந்த நிலையில், இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக சாடி உள்ளார்.
அவர் கூறியதாவது, தொடர்ந்து தவறு செய்வதை முதலில் நிறுத்துங்கள். உண்மையை ஒப்புக்கொண்டு அணியை விட்டு விலகி செல்லுங்கள். தோனிக்கு வயதாகிவிட்டது. அவரிடம் பெரியதாக எதிர்பார்ப்பது தவறு. வயதாகியும் தொடர்ந்து பேட்டிங்கிற்கு வந்து தவறு செய்வது சரியான விஷயன் அல்ல. உங்களால் செய்ய முடியவில்லை என்றால், என்னால் முடியவில்லை என ஒப்புக்கொண்டு விலகிச் செல்வதுதான் நல்லது.
ஆனால் இந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும். ஒருவேளை அவர் தொடர்ந்து விளையாட நினைத்தால், அவர் என்ன ரோலில் விளையாடுவார். கேப்டனாகவா? இல்லை விக்கெட் கீப்பராகவா? இல்லை ஃபினிசராகவா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். உண்மையில் தோனிக்கு வயது மூப்பால் உடல் தகுதி பிரச்சனை உள்ளது.
அவரது முட்டி முன்பு போல் இல்லை. உடல் தகுதி அனைத்து குறைந்து கொண்டே வருகிறது. சிஎஸ்கே அணியின் முக்கிய பிரச்சனையே தோனி தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுவதுதான். தோனி களத்திற்கு வந்தாலே எதிரணியின் கேப்டன் சுழற் பந்து வீச்சாளர்களிடம் பந்தை கொடுத்து விடுகிறார்கள். அவர் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிகவும் தடுமாறுகிறார் என அவர் கூறினார்.
மேலும் படிங்க: வைபவ் சூர்யவன்ஷியை கட்டி பிடிச்சேனா? ப்ரீத்தி ஜிந்தா கோபம்!
மேலும் படிங்க: விராட் கோலி ரெக்கார்டு குறி வைத்த சாய் சுதர்சன் - ’என்னோட லட்சியம் இதுதான்’ ஓபன் டாக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ