மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த பக்கா பிளான் போட்ட தோனி..!!

MS Dhoni : மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி பக்காவாக ஸ்கெட்ச் போட்டுள்ளார்.

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 19, 2025, 04:44 PM IST
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை அணிகள் மோதல்
  • மும்பை அணியை வீழ்த்த எம்எஸ் தோனியின் பிளான்
  • டெவால்ட் ப்ரீவிஸ் சிஎஸ்கே அணியில் இணைந்தார்
மும்பை இந்தியன்ஸ்  அணியை வீழ்த்த பக்கா பிளான் போட்ட தோனி..!!

MS Dhoni, Chennai Super Kings : ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியாக விளையாடிய போட்டியில் தோனியின் அதிரடி பேட்டிங் காரணமாக வெற்றியை பெற்றது. அதேபோல் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன் மூன்றாவது வெற்றியை பெறும் முனைப்பிலும் இருக்கிறது. ஆனால் தோனி, சிஎஸ்கே வெற்றிக்கு பக்கவாக ஸ்கெட்ச் போட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source

புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்தாலும் இனி வரும் போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என நினைக்கிறார் சிஎஸ்கே கேப்டன் தோனி. அதற்காக சிஎஸ்கே அணி எந்த இடத்தில் எல்லாம் வீக் பாயிண்டாக இருக்கிறதோ அதனையெல்லாம் சரிசெய்து கொண்டிருக்கிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சொதப்பியதால், சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை ஏற்றவுடன் அதனை மாற்றினார். ஒழுங்காக விளையாடாத ராகுல் திரிபாதி, டெவோன் கான்வே இருவரையும் வெளிய உட்கார வைத்தார். அவர்களுக்கு பதிலாக ஷேக் ரசீத் என்ற இளம் பிளேயரை ஓப்பனிங் இறக்கினார். அதற்கு நல்ல ரிசல்டும் கிடைத்தது.

அதேநேரத்தில் மிடில் ஆர்டரில் விஜய் சங்கரை அவர் நம்பவில்லை. அதனால் அவருக்கு பதிலாக இன்னொரு பிளேயர் வேண்டும் என்ற முடிவுக்கு வந்த தோனி, உடனடியாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் ப்ரீவிஸை சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்தார். அவர் முன்னாள் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயரும் கூட. அவரை இப்போது அணியில் சேர்த்திருக்கும் தோனி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலேயே களமிறக்கவும் முடிவு செய்திருக்கிறார்.

ஏனென்றால் கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் விளையாடியதால் அந்த மைதானம் குறித்த புரிதல் அவருக்கு இருக்கும். எனவே டெவால்ட் ப்ரீவிஸ் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பயன்படுத்தலாம் என்ற முடிவில் இருக்கும் தோனி, பவுலிங்கிலும் அதிரடி மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளார். கலீல் அகமது, நூர் அகமதுடன் மதீஷா  பத்திரனா ஆகியோர் மெயின் பவுலர்களாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரை சுழற்பந்துவீச்சுக்கு வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ள தோனி, இனி அஸ்வினுக்கு அணியில் இடம் கொடுக்கக்கூடாது என்ற முடிவிலும் இருக்கிறார். ஏனென்றால் அணிக்குள் காம்பினேஷன் அமைந்துவிட்டால் தோனி அதனை மாற்றமாட்டார். அந்தவகையில் எல்லா பிளானும் தயாராக இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வெற்றியை  வசமாக்க தயாராக இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 

மேலும் படிக்க | சிஎஸ்கேவில் இணைந்த டெவால்ட் பிரெவிஸ்! பிளேயிங் 11ல் அதிரடி மாற்றம்!

மேலும் படிக்க | மும்பை வான்கடே மைதானத்தில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News