திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா ஆகியோர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.வருகிற 12-ம் தேதி இரவு ஐதராபாத்தில் இறுதி போட்டி நடக்கிறது.


இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினேஷ் கார்த்திக் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.


இதேபோல் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அவரது மனைவி ரித்திகா, குழந்தை சமைரா ஆகியோருடன் இன்று காலை திருப்பதி வந்து சுவாமி தரிசனம் செய்தார்.