ஐபிஎல்லில் ரோஹித் சர்மாவை அதிகமுறை அவுட் ஆக்கிய பவுலர் யார் தெரியுமா?

Rohit Sharma: ஐபிஎல் வரலாற்றில் சில குறிப்பிட்ட பந்துவீச்சாளர்கள் ரோஹித் சர்மாவை அதிக முறை ஆட்டம் இழக்க செய்துள்ளனர். அப்படி ரோகித் சர்மாவை திணறடித்த ஐந்து பந்துவீச்சாளர்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - RK Spark | Last Updated : Mar 16, 2026, 06:21 AM IST
  • ஐபிஎல் வரலாறு!
  • ரோஹித் சர்மாவை அதிக முறை...
  • அவுட்டாக்கி மிரட்டிய 5 பந்துவீச்சாளர்கள்!
ஐபிஎல்லில் ரோஹித் சர்மாவை அதிகமுறை அவுட் ஆக்கிய பவுலர் யார் தெரியுமா?

ஐபிஎல் தொடர் உலகம் முழுவதும் அனைவராலும் பார்க்கப்படும் ஒரு உலகளாவிய கிரிக்கெட் தொடராக உள்ளது. இந்த தொடரில் விளையாட வேண்டும் என்பது பல வீரர்களுக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது. ஐபிஎல் தொடரில் பவுலர்களை விட பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும். குறிப்பாக இம்பாக்ட் பிளேயர் வந்த பிறகு, முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆரம்பமாகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா போன்ற வீரர்கள் ஐபிஎல்லில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். முதல் ஓவரிலேயே சிக்ஸர்களை பறக்க விடும் ரோகித் சர்மாவிற்கு பவர்பிளேயில் பந்து வீசு வேண்டும் என்பதே பல பவுலர்களுக்கு தலைவலியாக இருக்கும். ஆனாலும் ஐபிஎல் வரலாற்றில் சில குறிப்பிட்ட பந்துவீச்சாளர்கள் ரோஹித் சர்மாவை அதிக முறை ஆட்டம் இழக்க செய்துள்ளனர். அப்படி ரோகித் சர்மாவை திணறடித்த ஐந்து பந்துவீச்சாளர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | சேப்பாக்கமே அதிர போகுது... CSK நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் - டிக்கெட் போடுவது எப்படி?

சுனில் நரைன் - 8 முறை

ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் சர்மாவை அதிக முறை ஆட்டமிழக்க செய்த வீரர் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் சுனில் நரைன் தான். இவரது மிஸ்டரி ஸ்பின்னை கணிக்க முடியாமல் ரோகித் சர்மா எப்போதுமே சிரமத்தை சந்தித்து உள்ளார். குறிப்பாக பவர் பிளேயரில் போடும்போது பலமுறை ஆட்டம் இழந்துள்ளார் ரோஹித். சுனில் நரைன் பந்தை அடிக்க முயற்சித்து இதுவரை எட்டு முறை தனது விக்கெட்டை இழந்துள்ளார். சுனில் நரைன் பந்துவீச வந்தாலே ரோஹித் ஆட்டமிழப்பார் என்ற பேச்சுக்களும் இருந்து வருகிறது. 

அமித் மிஸ்ரா - 7 முறை 

இந்திய அணி முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பந்தில், ரோஹித் சர்மா ஏழு முறை ஆட்டம் இழந்துள்ளார். பந்தை மெதுவாக காற்றில் சுழற்றும் திறமை கொண்ட அமித் மிஸ்ரா, ரோகித் சர்மாவிற்கு ஒரு தலை வலியாகவே இருந்துள்ளார். அமித் மிஸ்ராவின் பந்தை, இறங்கி சிக்ஸ் அடிக்க முற்படும் போதெல்லாம் ரோகித் சர்மா தனது விக்கெட்டை இழந்துள்ளார். 

வினய் குமார் - 6 முறை

ஐபிஎல்லில் ஆரம்பகட்ட காலங்களில் ரோஹித் சர்மாவிற்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தவர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் வினய் குமார் தான். ஐபிஎல் வரலாற்றில் வினைக் குமாரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி உள்ளார் ரோஹித். பவர் பிளேயில் துல்லியமான லைவ் மற்றும் லெந்தில் பந்து வீசி ரோகித் சர்மாவை ஆறு முறை ஆட்டமிழக்க செய்துள்ளார்.  வெறும் 33 பந்துகளில் 6 முறை விக்கெட் எடுத்தது, இவருக்கு எதிரான ரோஹித்தின் தடுமாற்றத்தை தெளிவாக காட்டுகிறது. 

ட்வைன் பிராவோ - 5 முறை

டெத் ஓவர்களில் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக இருப்பவர் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ட்வைன் பிராவோ. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் விளையாடி உள்ள ட்வைன் பிராவோ ரோஹித் சர்மாவை 5 முறை ஆட்டமிழக்க செய்துள்ளார். ட்வைன் பிராவோவின் துல்லியமான யார்கர் மற்றும் ஸ்லோ பந்தங்களை கணிக்க முடியாமல் ரோகித் சர்மா தனது விக்கட்டை பறி கொடுத்துள்ளார். குறிப்பாக ரோஹித் சர்மா நன்றாக பேட்டிங் செய்து வரும் கட்டங்களில் ட்வைன் பிராவோ, ஸ்லோ பந்துகளை வீசி அவரது விக்கெட்டை எடுத்து அணிக்கு திருப்புமுனையை கொடுத்துள்ளார். 

சந்தீப் சர்மா - 5 முறை

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மாவும் ரோகித் சர்மாவை தனது பவுலிங்கால் திணறடித்துள்ளார். பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யும் திறமையும், தேவையான நேரத்தில் ஸ்லோ பந்துகளை வீசும் திறமையும் சந்தீப் சர்மா வைத்துள்ளார். அதிரடியாக ஆடும் ரோகித் சர்மாவை, இவரது ஸ்லோ பால் மூலம் 5 முறை ஆட்டமிழக்க செய்துள்ளார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துகளைத் தொடர்ந்து வீசி அவரைத் தவறு செய்யத் தூண்டுவதில் சந்தீப் சர்மா கில்லாடி. ஐபிஎல் தொடரில் பல பிரம்மாண்டமான சாதனைகளை படைத்து, மும்பை அணிக்கு பல கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவுக்கு, இந்த 5 பந்துவீச்சாளர்களும் ஒரு தடையாகவே இருந்துள்ளனர்.

மேலும் படிக்க | சென்னை அணியில் உள்ள 3 முக்கிய பிரச்சனை! கோப்பை செல்வது கஷ்டம் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News