)
FIFA World Cup 2026, Egypt Coach Comments on Argentina : பிபா உலகக் கோப்பை 2026 தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது. ரவுண்ட் ஆப் 16 சுற்று போட்டிகள் இன்றுடன் (ஜூலை 8) நிறைவடைந்தது.
பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் காலிறுதிச் சுற்று வரும் ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது. காலிறுதி சுற்றில் 8 அணிகள் தகுதிபெற்றுள்ளன. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, கடந்த உலகக் கோப்பையில் 2ஆம் இடம்பிடித்த பிரான்ஸ், 4ஆம் இடம்பிடித்த மொராக்கோ ஆகிய அணிகள் தற்போது காலிறுதிச் சுற்றில் இடம்பிடித்துள்ளன.
இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின், ஒரு முறை சாம்பியன் பட்டம் இங்கிலாந்து அணிகள் காலிறுதிக்கு வந்துளளன. இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத பெல்ஜியம், நார்வே அணிகளும் காலிறுதி போட்டியில் விளையாடுகின்றன. முதல்முறையாக சுவிட்சர்லாந்து அணி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.
Next: Quarter-finals#FIFAWorldCup pic.twitter.com/To50MPa0Ye
— FIFA World Cup (@FIFAWorldCup) July 8, 2026
| அணிகள் | தேதி | இந்திய நேரம் |
| பிரான்ஸ் - மொராக்கோ | ஜூலை 10 | நள்ளிரவு 1.30 |
| ஸ்பெயின் - பெல்ஜியம் | ஜூலை 11 | நள்ளிரவு 12.30 |
| நார்வே - இங்கிலாந்து | ஜூலை 12 | நள்ளிரவு 2.30 |
| அர்ஜென்டினா - சுவிட்சர்லாந்து | ஜூலை 12 | அதிகாலை 6.30 |
இது ஒருபுறம் இருக்க, இந்திய நேரப்படி நேற்று (ஜூலை 7) இரவு அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் அர்ஜென்டினா - எகிப்து அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டியில் அர்ஜென்டினா 79வது நிமிடத்தில் இருந்து 93வது நிமிடம் வரை, அதாவது 13 நிமிடத்தில் மூன்று கோல்கள அடித்து வெற்றியை உறுதிசெய்தது.
அதற்கு முன், முதல் 69வது நிமிடத்திற்கு எகிப்து அணி 2 கோல்களை பதிவு செய்திருந்தது. அதேநேரத்தில் 60வது நிமிடத்தில் எகிப்து அணி அடித்த கோல், ஒரு Foul காரணமாக VAR மூலம் ஆய்வுக்கு உட்படுத்தி அதற்கு பின்னர் ரத்து செய்யப்பட்டது. எகிப்து மொத்தமாக 3 கோல் அடித்தும், 2 கோல்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அதன்பின்னர், அர்ஜென்டினா மூன்றாவது கோலை அடித்தபோதும், ஒரு Foul ஏற்பட்டது. ஆனால், அதை நடுவர் ஆய்வுக்குட்படுத்தவில்லை. இதனால் எகிப்து அணிக்கு கிடைக்க வேண்டிய பெனால்டி வாய்ப்பும் கிடைக்கவில்லை.
இந்த இரு சம்பவங்களும் எக்கச்சக்க கேள்விகளை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியது. பிபா நிர்வாகமும், நடுவரும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர். களத்திலேயே பயிற்சியாளர்கள், வீரர்கள் தங்களின் அதிருப்தியை நடுவர்களிடம் வெளிக்காட்டினர். பிபா நிர்வாகமும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது.
Egypt head coach Hossam Hassan is set to face punishment from FIFA after making a cross gesture following a yellow card from the referee during the match against Argentina.
— Micky Jnr (@MickyJnr__) July 7, 2026
FIFA will review the incident before deciding on any… pic.twitter.com/dbW3DHIl5m
இதுகுறித்து போட்டிக்கு பின்னர், எகிப்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஹொஸாம் ஹசன் கூறியவை: