பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை அவனி லேகாரா சாதனை

அவனி லேகாராவைத் தவிர, துப்பாக்கி சுடும் போட்டியில்  அவனி லேகாரா தவிர, இந்திய வீரர் பிரவீன் குமார் (Praveen Kumar) இன்று (வெள்ளிக்கிழமை) டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2021, 04:33 PM IST
  • பாராலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை
  • இரண்டு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கம்.
  • 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச் 1 போட்டியில் தங்கப் பதக்கம்.
பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை அவனி லேகாரா சாதனை title=

Tokyo 2020 Paralympic Games: டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் 50 மீ துப்பாக்கி சுடும் மூன்று நிலை SH-1 போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்று, பாராலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை அவனி லேகாரா (Avani Lekhara) பெற்றார்.

முன்னதாக, 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச் 1 போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை 19 வயதான அவனி லேகாரா பெற்றார்.

அவனி லேகாராவைத் தவிர, துப்பாக்கி சுடும் போட்டியில்  அவனி லேகாரா தவிர, இந்திய வீரர் பிரவீன் குமார் (Praveen Kumar) இன்று (வெள்ளிக்கிழமை) டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்திய வீரர்களில் பதக்கம் வென்றவர்களில் பிரவீன் குமார் இளைய ஆவார். 

இந்த பதக்கங்கள் வென்றதன் மூலம் 2 தங்கம் (Gole Medal) உட்பட மொத்தம் 12 பதக்கங்கள் இந்தியா வசம் வந்துள்ளது. இதுவரை இரண்டு தங்கம், ஆறு வெள்ளி (Silver medal) மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது 

 

50 மீ ரைபிள் எஸ்ஹெச் -1 போட்டியில் 1176 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

ALSO READ | Tokyo Paralympics: இந்தியாவின் பிரவீன் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார்

இறுதிப்போட்டி மிகவும் அவனி லேகாரா மொத்தம் 445.9 புள்ளிகளைப் பெற்றார். உக்ரைனின் இரினா ஷ்செட்னிக்கை முந்தி அவர் பதக்கம் வெல்ல முடிந்தது. 

இதுக்குறித்து பேசிய சாதனை பெண் அவனி லேகாரா "இது ஒரு கடினமான இறுதிப் போட்டி. ஆனால் என்னால் ஒரு வெண்கலப் பதக்கம் வெல்ல முடிந்தது என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நான் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். இறுதிப்போட்டியின் முடிவு இதுதான்" என்றார். 

"நான் இன்னும் முயற்சி செய்ய வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. அடுத்த முறை நான் சிறப்பாகச் செயல்படுவேன். எனது கவனத்தை சிதறடிக்கும் விஷயங்கள் நிறைய இருந்தன. ஆனாலும் நான் 100 சதவீத உழைப்பை கொடுத்தேன் என்றார். 

2012 ஆம் ஆண்டு கார் விபத்தில் முதுகு தண்டில் காயமடைந்த ஜெய்பூரை சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர், 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச் -1 போட்டியில் 249.6 புள்ளிகள் என பாராலிம்பிக் சாதனை படைத்தார்.

ALSO READ | I'm sorry. Rules are rules: தாமதமாக வந்ததால் தங்கப் பதக்கத்தை இழந்த வீரர்! சோகக்கதை

அவனி லேகாராவுக்கு முன் ஜோகிந்தர் சிங் சோதி விளையாட்டுப் போட்டியின் ஒரே கட்டத்தில் பல பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் ஆவார். 1984 பாராலிம்பிக்கில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார். அவரது வெள்ளிப் பதக்கங்கள் ஷாட் புட்டிலும், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலிலும் பெற்றார்.

அவனி லேகாரா இப்போது தீபக் மற்றும் சித்தார்த் பாபுவுடன் இணைந்து 50 மீ ரைபிள் ப்ரோன் எஸ்ஹெச் -1 போட்டியில் கலந்து கொள்வார்.

தன் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் அவனி 2015 முதல் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று வருகிறார். சட்டம் படிக்கும் லேகாரா, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த 2017 உலகக் கோப்பையில் இந்தியா சார்பில் பங்கேற்றார். 

ALSO READ | Paralympics 2021: உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலுவுக்கு வெள்ளி, சரத்குமாருக்கு வெண்கலம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News