IPL 2025 Five Records: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதிவரை நடைபெற்றது. 10 அணிகள் மோதிய இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டனஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆப் தொடருக்கு தகுதிபெற்றன.
IPL 2025: 18 ஆண்டுகளுக்கு பின் ஆர்சிபிக்கு கோப்பை...
இந்த ஐபிஎல் 2025 தொடர் பல்வேறு விஷயங்களில் சிறப்பானதாகும். குறிப்பாக, 18 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதன் முதல் கோப்பையை வென்றுள்ளது. விராட் கோலியின் நீண்டநாள் ஆசையும் நிறைவேறியது. அதுமட்டுமின்றி ஆர்சிபியும் 16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் ஒரு போட்டியை வென்றிருக்கிறது. ஆர்சிபி அணியும் தான் விளையாடிய பிளே ஆப் சேர்த்து அனைத்து AWAY போட்டிகளையும் வென்றது. லக்னோவில் ஹைதராபாத் அணி உடன் நடைபெற்ற போட்டியில் மட்டுமே தோல்வியடைந்தது.
IPL 2025: வீரர்கள் வாங்கிய முக்கிய விருதுகள்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்தவருமான சாய் சுதர்சன் அதிக ரன்களை அடித்ததன் மூலம் ஆரஞ்சு கேப்பை வென்றார். மேலும், அதிக பவுண்டரிகளை அடித்தவர் என்ற விருதையும் அவரே வென்றார். தொடர்ந்து, வளர்ந்து வரும் இளம் வீரர் விருதையும் அவரே வென்றார். அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் கேப்பை குஜராத் அணி வீரர் பிரசித் கிருஷ்ணா பெற்றார். மேலும், தொடரின் மதிப்புமிக்க வீரர் விருதை மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டர் சூர்யகுமார் யாதவ் வென்றார்.
IPL 2025: இந்த சீசனின் 5 தனித்துவ சாதனைகள்
இவை ஒருபுறம் இருக்க, இந்த ஐபிஎல் தொடர் தனித்துவமான சாதனைகள் பதிவாகி உள்ளன. அந்த வகையில் தனித்துவமான ஐந்து சாதனைகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
- முதல்முறையாக ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2025ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மொத்தம் 26 ஆயிரத்து 381 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக அதிகளவில் சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்த 2025 ஐபிஎல் சீசனில் 1,294 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருக்கிறது.
- 2025 ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் பேட்டர் சூர்யகுமார் யாதவ் 700 ரன்களை அடித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் இவர் முதல்முறையாக 700 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
- மேலும், சூர்யகுமார் யாதவ் ஒரு சிறப்பான சாதனையையும் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மட்டுமின்றி அனைத்து டி20 தொடரையும் எடுத்துக்கொண்டாலும் ஒரு ஓப்பனர் இல்லாத பேட்டர் இத்தனை ரன்களை குவித்துள்ளது இவர் மட்டும்தான்.
- ஐபிஎல் தொடரில் ஒரு அணி ஒரே சீசனில் 3000 ரன்களை குவித்ததும் இந்த சீசனில்தான் நடந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் அணியாக இந்த சாதனையை படைத்துள்ளது.
மேலும் படிக்க | விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டி விளையாடுவார் - ஆஸி பிளேயர் சொன்ன முக்கிய தகவல்
மேலும் படிக்க | ஜெய்ஸ்வால் உடன் ஓப்பனிங்கில் இவர் தான் இறங்குவார்... சாய் சுதர்சன் கிடையாது!
மேலும் படிக்க | RCB சொதப்பல்.. போலீசுக்கு அரசியல் அழுத்தம்..! வெளியான பகீர் உண்மைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









